வட கொரியாவில் பரவும் கோவிட்; புதிதாக 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல்

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சியோல் : வட கொரியாவில், கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது.உலகம் முழுதும் 2020ல் கோவிட் பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக,
North Korea, Covid19, Corona Virus, Kim Jong un

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சியோல் : வட கொரியாவில், கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது.

உலகம் முழுதும் 2020ல் கோவிட் பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக, அந்நாடு அறிவித்துள்ளது.

இன்று, புதிதாக 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்; ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது.

இதையடுத்து, 2.6 கோடி மக்கள் தொகை உடைய வட கொரியாவில், காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 லட்சத்தை கடந்துள்ளது; பலி எண்ணிக்கை, 62 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news



கோவிட் பரிசோதனை உபகரணங்களின் தட்டுப்பாடு உள்ளதால், அங்குள்ள மக்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பாதிக்கப்பட்டோரில் எத்தனை பேருக்கு, கோவிட் தொற்று உள்ளது என்பது இதுவரை தெரியவரவில்லை.

இதேபோல, அங்கு கோவிட் தடுப்பூசிகள் இல்லாததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, சீனாவும், தென் கொரியாவும் தடுப்பூசிகளை வழங்க முன்வந்தன. எனினும், அவற்றை ஏற்க, வட கொரியா மறுத்தது. தற்போது மீண்டும், தடுப்பூசி வழங்க தென் கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதை, வட கொரியா ஏற்காமல் இருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-மே-202220:40:34 IST Report Abuse
Ramesh Sargam வடகொரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தது. ஒரு சில செய்திகள் அங்கு இந்த கொரானா வைரஸ் இல்லவே இல்லை என்றும் அறிவித்தது. ஆனால் இப்பொழு குட்டு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. சீனாவும், தென் கொரியாவும் தடுப்பூசிகளை வழங்க முன்வந்தன. எனினும், அவற்றை ஏற்க, வட கொரியா மறுத்தது. ஒருவேளை இந்தியா தடுப்பூசி கொடுக்கமுன்வந்தால் வடகொரியா ஏற்றுக்கொள்ளுமோ என்னவோ. வடகொரியா அதிபர் மோசமானவனாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள மக்கள் அப்படி இருக்கவாய்ப்பில்லை. அவர்களுக்காக இந்தியா தடுப்பூசியை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X