ஜமைக்காவில் ஐ.ஐ.டி.,: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகவல்

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கிங்ஸ்டன்: ''ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை, வெளிநாடுகளில் துவக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முதல் நிறுவனத்தை, தங்கள் நாட்டில் திறக்க வேண்டும் என, ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் - கிரெனடைன்ஸ் ஆகியவற்றுக்கு, ஏழு நாள்
Ram Nath Kovind, Jamaica, IIT, President

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கிங்ஸ்டன்: ''ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை, வெளிநாடுகளில் துவக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முதல் நிறுவனத்தை, தங்கள் நாட்டில் திறக்க வேண்டும் என, ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது,'' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் - கிரெனடைன்ஸ் ஆகியவற்றுக்கு, ஏழு நாள் சுற்றுப்பயணமாக, 15ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டுச் சென்றார். ஜமைக்காவுக்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த், தலைநகர் கிங்ஸ்டனில், அந்நாட்டு பார்லிமென்ட்டின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், நேற்று (மே 17) பேசினார்.

அதன் விபரம்: இந்தியாவிலிருந்து, 15 ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள ஜமைக்காவில் நான் இருந்தாலும், இந்தியாவில் இருப்பது போன்றே உணர்கிறேன். பார்லிமென்ட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் உறுப்பினர்களாக உள்ளது பெருமையாக உள்ளது. இந்தியாவில் கல்வித்துறை மிக தரமாக, சிறப்பாக உள்ளது. இங்குள்ள ஐ.ஐ.டி.,க்களில் படித்த பலர், சர்வதேச அளவில் பெரும் தொழில் நிறுவனங்களிலோ, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலோ தலைமை நிர்வாகிகளாக உள்ளனர்.


latest tamil news



எங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, வெளிநாடுகளில் ஐ.ஐ.டி.,க்கள் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை துவக்க விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளில், ஜமைக்காவும் ஒன்று என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் முதன்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களுக்காக, சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இதை ஜமைக்கா மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மேற்கத்திய நாடுகளின் கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட, இந்தியாவில் மிக மிக குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202212:04:01 IST Report Abuse
அப்புசாமி ஐ.சி.டி க்களெல்லாம் பண்டித நேர்வின் முயற்சியால் ஜெர்மனி, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ரஷியா, அமெரிக்கா நாடுகளின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டவை. தற்போது என்.ஐ.டி என்று சொல்லப்படும் ஆ.ஈ.சி க்கள் யுனெஸ்கோ உதவியுடன் மாநிலத்திற்கு ஒன்று என கொண்டுவரப்பட்டவை. ஐ.ஐ.டி ஜமைக்கா போவதற்கு முன்னாடி, மணிப்பால் கல்வி நிறுவனம் அங்கே கல்விக்கடை போட்டு வெற்றிகரமா ஓடிட்டிருக்கு. அமெரிக்காவில் மெடிக்கல் சீட்டு கிடைக்காத இந்தியர் பலர் அங்கே பயின்று வருகிறார்கள் இவுரு ஏதோ புதுசா செய்யுற மாதிரி பேச்சு.இதை அங்கே போய் பேசணுமாக்கும்?
Rate this:
Cancel
19-மே-202211:55:22 IST Report Abuse
அப்புசாமி இங்கே கிராமத்துக்கு ஒரு ஐ.ஐ.டி வெக்கணும். அப்போதான் இந்தியா முழு வளர்ச்சி அடையும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
18-மே-202220:34:34 IST Report Abuse
Ramesh Sargam ஐ.ஐ.டி.யின் புகழ் வெளிநாடுகளிலும் கொடிகட்டி பறக்கிறது. ஐ.ஐ.டி.யின், தரம் இப்பொழுது உள்ளதை விட மேலும் உயர வேண்டும் என்பது எனது ஆசை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X