இதே நாளில் அன்று

Added : மே 18, 2022 | |
Advertisement
மே 19, 1996கேரள மாநிலம் வைக்கத்தில், நாராயணிக்கு மகளாக, 1923 செப்., 23ல் பிறந்தவர் வி.என்.ஜானகி. குடும்ப வறுமையால், 12 வயது ஜானகியுடன் கும்பகோணம் வந்தார் நாராயணி. பின், ஜானகியின் பள்ளி ஆசிரியர் ராஜகோபால அய்யருக்கு துணைவியான நாராயணி, அவருடன் சென்னைக்கும் வந்தார். ராஜகோபால் பாட்டெழுத, சிறு வேட நடிகையானார் ஜானகி. முன்னணி நடிகையான போது, துணை நடிகர் கணேஷ் பட்டை மணந்து
இதே நாளில் அன்று


மே 19, 1996


கேரள மாநிலம் வைக்கத்தில், நாராயணிக்கு மகளாக, 1923 செப்., 23ல் பிறந்தவர் வி.என்.ஜானகி. குடும்ப வறுமையால், 12 வயது ஜானகியுடன் கும்பகோணம் வந்தார் நாராயணி.

பின், ஜானகியின் பள்ளி ஆசிரியர் ராஜகோபால அய்யருக்கு துணைவியான நாராயணி, அவருடன் சென்னைக்கும் வந்தார். ராஜகோபால் பாட்டெழுத, சிறு வேட நடிகையானார் ஜானகி. முன்னணி நடிகையான போது, துணை நடிகர் கணேஷ் பட்டை மணந்து சுரேந்திரன் என்ற மகனை பெற்றார்.

ஜானகி நடித்த, ராஜமுக்தி படத்தில், 2வது நாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆர்., இருவரும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பையும், காதலையும் தொடர, ஜானகி -- கணேஷ் பட் மண உறவு முறிந்தது. பின், ஜானகியுடன் ரகசிய வாழ்வை தொடர்ந்த எம்.ஜி.ஆர்., தன், 2வது மனைவி மறைவுக்குப் பின், இவரை மனைவியாக்கினார்.

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜானகி, 23ம் நாளில் ஆட்சியை இழந்தார். அடுத்த தேர்தலில் தோற்றதால், அ.தி.மு.க.,வையும், இரட்டை இலையையும் ஜெ.,யிடம் ஒப்படைத்து ஒதுங்கினார். தமிழகத்தில் வாரிசு அரசியலை துவக்கி வைத்த ஜானகி, தன், 73வது வயதில், 1996 இதே நாளில் மறைந்தார். தமிழக முதல் பெண் முதல்வரின் நினைவு தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X