வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்-----ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பணவீக்கம், 40 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
![]()
|
இதையடுத்து, அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பயம் அதிகரித்து வருகிறது.தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, பிரிட்டனில், கடந்த மார்ச் மாதத்திலேயே பணவீக்கம் அதிகரித்து, 7 சதவீதமாக உயர்ந்திருந்தது.இந்நிலையில், ஏப்ரலில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும்,
![]()
|
' இன்போசிஸ்' நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனும் பிரிட்டனின் நிதியமைச்சருமான, ரிஷி சுனாக் கூறியதாவது:எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஏப்ரலில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த உலகளாவிய சவால்களிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்க முடியாது.ஆனால், எங்களால் முடிந்த வரை, எங்கு முடியுமோ, அங்கு ஆதரவை தருகிறோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மேலும் நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement