சரத் பவாரை விமர்சித்தநடிகை சிறையில் அடைப்பு

Added : மே 18, 2022 | |
Advertisement
தானே-தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை விமர்சனம் செய்த நடிகையை, ஜூன் 1ம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே நகரில் வசிக்கும் மராத்தி நடிகை கேதகி சிதலே, 29, சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தேசியவாத காங்., தலைவர் சரத்
சரத் பவாரை விமர்சித்தநடிகை சிறையில் அடைப்பு

தானே-தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை விமர்சனம் செய்த நடிகையை, ஜூன் 1ம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே நகரில் வசிக்கும் மராத்தி நடிகை கேதகி சிதலே, 29, சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், 80, குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதையடுத்து, தானே போலீசார் வழக்கு பதிவு செய்து, கேதகியை கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த கேதகி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஜூன் 1ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.நடிகையின் பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கல்லுாரி மாணவர் நிகில் பாம்ரே, 23, என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X