கோவை நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம்! வாரத்தில் இரு நாட்கள் கட்டாய விடுமுறை

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | |
Advertisement
கோவை : பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்து வருவதால், கோவையிலுள்ள நுாற்பாலைகளில் நுால் உற்பத்தி நிறுத்தம் செய்து, பணியாளர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பருத்தி மற்றும் பஞ்சு விலை உயர்வால், கோவையிலுள்ள நுாற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்து வருவதால், கோவையிலுள்ள நுாற்பாலைகளில் நுால் உற்பத்தி நிறுத்தம் செய்து, பணியாளர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பருத்தி மற்றும் பஞ்சு விலை உயர்வால், கோவையிலுள்ள நுாற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நாடு முழுக்க பருத்திக்கும் பஞ்சுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. ஒரு கேண்டியின் விலை, சராசரியாக கடந்த ஜனவரியில் 76,000 ரூபாயாக இருந்தது. அது படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு லட்சத்து ஏழாயிரமாக உயர்ந்துள்ளது.

பருத்தி நுால் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. விலை ஏற்றத்தால் பலரும் செயற்கை நுால் இழைக்கு மாறிவிட்டனர்.பெருவாரியான சிறு மற்றும் நடுத்தர நுாற்பாலைகளில், நடைமுறை மூலதனம் (ஒர்க்கிங் கேப்பிட்டல்) அழியும் தருவாயில் உள்ளது. அதனால் தமிழகத்திலுள்ள நுாற்பாலை உரிமையாளர்கள் அனைவரும், வாரத்துக்கு இரண்டு நாட்கள் மில்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். ஒரு சில நுாற்பாலைகளில் இரண்டு ஷிப்ட்கள் குறைக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலை நீடித்தால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதோடு, ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு தொடரில் உள்ள, அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்படும்.இது குறித்து, தென்னிந்திய நுாற்பாலைகள் சங்க தலைவர் செல்வன் கூறியதாவது:பஞ்சு விலை குறைந்தால்தான் எங்களால், அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்க முடியும்.

அதுவரை வாரத்துக்கு இரண்டு நாட்கள் நுாற்பாலைகளுக்கு, விடுமுறை விடுவதை தவிர வேறு வழியில்லை. வரும் நாட்களில் இரண்டு நாட்கள் என்பது ஒரு வாரமாக மாறும் வாய்ப்பு உள்ளது.அதற்குள் மத்திய அரசு மாநில அரசு இரண்டும் இணைந்து, எங்களது பிரச்னையை தீர்த்து நுாற்பாலை பணியாளர்களின் வேலை இழப்பை சரிசெய்ய வேண்டும். அதோடு உற்பத்தியை பெருக்குவதற்கான வழிகளை யோசிக்க வேண்டும்.இவ்வாறு, செல்வன் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X