தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள்: அரசு பதிலளிக்க உத்தரவு

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : தியேட்டர்களில், அதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடை செய்யக் கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த மனு:திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிகள், உரிம நிபந்தனைகளை, உரிமையாளர்கள் பலர் பின்பற்றுவது இல்லை. விதிகளை மீறி காலை 9:00
early morning Show, theatre, high court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தியேட்டர்களில், அதிகாலையில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடை செய்யக் கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த மனு:திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் மற்றும் விதிகள், உரிம நிபந்தனைகளை, உரிமையாளர்கள் பலர் பின்பற்றுவது இல்லை. விதிகளை மீறி காலை 9:00 மணிக்கு முன், சிறப்பு காட்சிகள் திரையிடப் படுகின்றன. அதற்கு, அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்; வரி ஏய்ப்பும் நடக்கிறது.


latest tamil news



இதுகுறித்து, உள்துறைச் செயலர், டி.ஜி.பி., போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிம நிபந்தனைகளை மீறி, சினிமா படங்கள் திரையிடப்படுவதை தடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விதிகளை மீறி, எட்டு காட்சிகள் வரை திரையிடப்படுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202211:16:58 IST Report Abuse
ராஜா திரைத்துறை ஒரு குடும்ப கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைப்பதை விட நேரடியாக அந்த குடும்பத்து நபர்களுக்கு அனுப்பி விடலாம்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
19-மே-202201:03:44 IST Report Abuse
Fastrack அமெரிக்க ஐரோப்பிய தேசங்களில் மன்மதலீலைகள் நேரடி காட்சி மற்றும் திரைப்படங்கள் சர்வசாதாரணமா நடக்கின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X