காந்திக்கு மரியாதை செலுத்த முடியலீங்க! விரைவில் சிலையை அமைக்க வலியுறுத்தல்

Added : மே 18, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காந்தி சிலை, ரவுண்டானா பகுதியில் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், கடந்த, 1985ம் ஆண்டு ஜன., 30ம் தேதி மகாத்மா காந்தி சிலை, நியூஸ்கீம் ரோட்டில் அமைக்கப்பட்டது. அப்போது ஒரு அரிஜன சிறுமியால் இந்த சிலை திறக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்டு, 37
காந்திக்கு மரியாதை செலுத்த முடியலீங்க!  விரைவில் சிலையை அமைக்க வலியுறுத்தல்


பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ரோடு விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட காந்தி சிலை, ரவுண்டானா பகுதியில் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில், கடந்த, 1985ம் ஆண்டு ஜன., 30ம் தேதி மகாத்மா காந்தி சிலை, நியூஸ்கீம் ரோட்டில் அமைக்கப்பட்டது.

அப்போது ஒரு அரிஜன சிறுமியால் இந்த சிலை திறக்கப்பட்டது. சிலை வைக்கப்பட்டு, 37 ஆண்டுகள் கடந்து விட்டது.காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், சுதந்திர தினத்தில், காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், அதிகாரிகள் என மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட, சிறுமியின் ஆசையாக கடந்த, 2019ம் ஆண்டு காந்தி சிலை மழையில் நனையாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு ரோடு விரிவாக்கத்துக்காக காந்தி சிலை அகற்றப்பட்டு, தாலுகா அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களுக்கு முன், சிலை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி ரவுண்டானாவில் சிலை வைக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்பின் அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:காந்தி சிலை அகற்றப்பட்டதால், முக்கிய நாட்களில் அவரது சிலைக்கு மரியாதை செய்ய முடியாத நிலை உள்ளது. பொள்ளாச்சியின் அடையாளமாக உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு பல மாதங்களாகியும், அமைப்பதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை.தற்காலிகமாக அமைக்கப்பட்ட ரவுண்டானாவை நிரந்தரமாக்கி, அதன் நடுவே மேடை அமைத்து காந்தி சிலை வைக்க வேண்டும். சுற்றிலும் புல்தரையுடன் அலங்கார விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


காந்தி பெயர் சூட்டணும்!



பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு, கோவை ரோடு, உடுமலை மற்றும் பாலக்காடு ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானாவில், காந்தி சிலை மீண்டும் அமைக்கப்பட உள்ளது. காந்தி சிலை அமைப்பதுடன், நியூஸ்கீம் ரோடு என்ற பெயரை மாற்றி, 'மகாத்மா காந்தி சாலை' என பெயர் சூட்ட வேண்டும். பல அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X