உயர் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலம்; திறந்தவெளி பல்கலை துணைவேந்தர் பேச்சு

Added : மே 18, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கோத்தகிரி : ''தேசிய அளவில் உயர் கல்வி பயில்பவர்களில், தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது,'' என, திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கூறினார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக உறுப்பு சமுதாய கல்லுாரி சார்பில், 'மென்திறன்கள்' என்ற தலைப்பில், மாணவர்களின் எதிர்கால படிப்பு


கோத்தகிரி : ''தேசிய அளவில் உயர் கல்வி பயில்பவர்களில், தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது,'' என, திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி கூறினார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக உறுப்பு சமுதாய கல்லுாரி சார்பில், 'மென்திறன்கள்' என்ற தலைப்பில், மாணவர்களின் எதிர்கால படிப்பு வாய்ப்புகள், படிப்பு முடித்த பிறகு வேலைக்கு தயாராவது குறித்த பயிற்சி கருத்தரங்கு நடந்தது.

இதில், முதற்கட்டமாக, 60 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,''தமிழக மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர, அவர்களின் தேவைக்கு ஏற்ப, ஒரு மாநில மொழியையோ அல்லது வெளிநாட்டு மொழியையோ, மூன்றாவதாக பயில வேண்டும். பாட திட்டத்தில் தொழில் முனைதல் பிரிவு சேர்க்கப்படும்

பட்சத்தில், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல், பிறருக்கு வேலை வழங்குபவராக விளங்குவர். தேசிய அளவில் உயர் கல்வி பயில்பவர்களில், 54 சதவீதம் தமிழக மாணவர்கள் என்ற நிலையில் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது,'' என்றார்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை அலங்கார மேரி, புனித மரியன்னை ஆலய பங்கு தந்தை ஞானதாஸ், பெண்கள் நல அறக்கட்டளை தலைவர் ஜெபராஜ், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
19-மே-202205:18:55 IST Report Abuse
Subramanian Sundararaman எண்ணிக்கை உள்ள அளவு தரம் உள்ளதா? கலை கல்லூரிகளில் படித்து இந்திய சிவில்சர்வீஸ் பணிகளில் எத்துணை பேர்ஆட்டம் வெற்றி அடைந்துள்ளனர்? CAA சட்டம் கொண்டுவந்தால் என்னுடைய பள்ளி தோழி அவள் மதம் காரணமாக பாக்கிற்கு திருப்பி அனுப்பி விடுவார்கள் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவிகளைத்தான் காணமுடிகிறது . எதை பற்றியும் சரியாக புரிந்துகொள்ளும் திறன் இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X