நாணயங்கள், தபால் தலைகளில் வனவிலங்கு! டாப்சிலிப்பில் 22ம் தேதி கண்காட்சி

Added : மே 18, 2022 | |
Advertisement
ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில், வரும், 22ம் தேதி பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு, நாணயங்கள் மற்றும் தபால்தலைகளின் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.உலகம் முழுவதும் காடுகள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் பல்லுயிர் பெருக்கம் பாதித்து, இயற்கை வளம் அழிந்து, உயிரினங்கள் அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கின்றன.பல்லுயிர் பெருக்கத்தில் ஏற்படும் பிரச்னைகள்,
நாணயங்கள், தபால் தலைகளில் வனவிலங்கு!  டாப்சிலிப்பில் 22ம் தேதி கண்காட்சி


ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில், வரும், 22ம் தேதி பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு, நாணயங்கள் மற்றும் தபால்தலைகளின் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.உலகம் முழுவதும் காடுகள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் பல்லுயிர் பெருக்கம் பாதித்து, இயற்கை வளம் அழிந்து, உயிரினங்கள் அழிவுப்பாதையை நோக்கி பயணிக்கின்றன.

பல்லுயிர் பெருக்கத்தில் ஏற்படும் பிரச்னைகள், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மே, 22ம் தேதி சர்வதேச பல்லுயிர் பெருக்க தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் புலிகள் காப்பகத்தில், இத்தினம் கொண்டாடப்பட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு வித்தியாசமான முறையில் பல்லுயிர் பெருக்க தினத்தை, டாப்சிலிப்பில் கொண்டாட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் கூறியதாவது:வரும், 22ம் தேதி டாப்சிலிப்பில், பல்வேறு நாடுகளின் தபால் தலைகள் மற்றும் நாணயங்களின் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், தபால் தலைகள், நாணயங்கள் சேகரித்து 'கின்னஸ்' சாதனை படைத்த முரளியின் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இதில், சிறப்பு என்னவென்றால் கி.மு., காலத்தில் இருந்து இதுவரையில் வெளியான நாணயங்கள், தபால் தலைகளில், எந்த அளவுக்கு வனவிலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.வரும், 22ம் தேதி காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரையில், மக்கள் டாப்சிலிப் வந்து கண்காட்சியில் பங்கேற்கலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X