வெயில் காலத்தில் சாலைகளில் செல்லும் போது துாரத்தில் நீர் இருப்பது போல தோன்றும். ஆனால் அதன் அருகில் சென்றால் நீர் இருக்காது. இது 'கானல் நீர்' என அழைக்கப்படுகிறது. வெயில் காலத்தில், தரையின் அருகே வெப்பம் அதிகமாகி, காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும். அதே சமயம் மேலே உள்ள காற்று ஒப்பீட்டளவில் வெப்பம் குறைந்து அடர்த்தி கூடுதலாக இருக்கும். எனவே இந்தக் காற்று அடுக்குகள் வழியே ஒளிக்கதிர்கள் வரும்போது, அவை வளைந்து, கானல் நீர் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தகவல் சுரங்கம்: மூன்றாவது பெரிய விலங்கு
நிலத்தில் வாழும் விலங்குகளில் யானை, காண்டா மிருகத்துக்கு அடுத்து மூன்றாவது பெரிய விலங்கு நீர்யானை. இவை ஆப்ரிக்க காடுகளில் அதிகம் வாழ்கின்றன. இவை கூட்டமாக வாழும் தன்மை யுடையவை. ஒரு கூட்டத்தில் சுமார் 40 நீர் யானைகள் இருக்கும். இதன் ஆயுட்காலம் 40 - 50 ஆண்டுகள். இதன் எடை 1500 கிலோ வரை இருக்கும். இது மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் ஓடும். இதன் உயரம் 5 அடி வரை இருக்கும். இது 180 டிகிரியில் வாயைத் திறக்கும், இதன் கடிக்கும் வலிமை முதலைக்கு நிகரானது. ஆண் நீர் யானையை விட பெண் நீர் யானை உருவத்தில் சிறியது.