மையங்களுக்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு; 993 விவசாயிகளிடம் 1,328 டன் கொள்முதல்

Added : மே 19, 2022 | |
Advertisement
உடுமலை : அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில், 993 விவசாயிகளிடமிருந்து, 1,328 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலுார், காங்கயம் ஆகிய பகுதிகளில், அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை துவக்கியுள்ளது.கடந்த பிப்., முதல், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கொப்பரை கொள்முதல் மையங்களில், ஒரு கிலோ
மையங்களுக்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு;   993 விவசாயிகளிடம் 1,328 டன் கொள்முதல்


உடுமலை : அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில், 993 விவசாயிகளிடமிருந்து, 1,328 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலுார், காங்கயம் ஆகிய பகுதிகளில், அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை துவக்கியுள்ளது.

கடந்த பிப்., முதல், ஒழுங்கு முறை விற்பனைக்கூட கொப்பரை கொள்முதல் மையங்களில், ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ. 105.90-க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.தற்போது, வெளிச்சந்தையில் கொப்பரைக்கான விலை, கிலோ, ரூ.82 ஆக குறைந்துள்ளதால், அரசு கொப்பரை கொள்முதல் மையத்திற்கு, வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் விற்பனைக்குழு, முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் கூறியதாவது: வெளிச்சந்தையில் கொப்பரை கொள்முதல் விலை குறைந்துள்ள நிலையில், அரசு கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது வரை, மாவட்டத்தில், 993 விவசாயிகளிடமிருந்து, 1,328 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஏறத்தாழ, 15 கோடி ரூபாய் விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. வரும், ஜூலை, 31 வரை அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் இயங்கும்.மடத்துக்குளம் உட்பட, மையங்கள் இல்லாத பகுதியில் வசிக்கும் விவசாயிகளும், அருகிலுள்ள மையங்களுக்கு கொப்பரை கொண்டு வந்து விற்பனை செய்யலாம். கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகை உடனடியாக வங்கிகணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X