ஒகேனக்கல்லில் அதிக தண்ணீர்; பரிசல் ஓட்ட, குளிக்க தடைவிதிப்பு

Added : மே 19, 2022 | |
Advertisement
ஒகேனக்கல்,- ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ளதால், ஆற்றில் பரிசல் இயக்க, குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கோடைக்காலத்தில் நீர்வரத்து குறைந்து காணப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகம் - கர்நாடகா காவிரி
ஒகேனக்கல்லில் அதிக தண்ணீர்; பரிசல் ஓட்ட, குளிக்க தடைவிதிப்பு

ஒகேனக்கல்,- ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உள்ளதால், ஆற்றில் பரிசல் இயக்க, குளிக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கோடைக்காலத்தில் நீர்வரத்து குறைந்து காணப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தமிழகம் - கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால், காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிலுள்ள மத்திய நீர் ஆணைய கணக்கீடு படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வினாடிக்கு, 5,600 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 25 ஆயிரம் கன அடியாகவும், மாலை, 4:00 மணிக்கு, 30 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

இதனால், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர் பாணி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கால், நேற்று காலை முதல் மறு உத்தரவு வரும் வரை, ஆற்றில் குளிக்கவும், பரிசல் சவாரிக்கும், தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்ய தர்ஷினி தடை விதித்து உள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X