தண்ணீர் வீண்
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் உயர்மட்ட பாலம் அருகே குழாய் உடைந்து, தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.-கோவிந்தராஜ், ஊத்துக்குளி ரோடு.வினியோகம் தாமதம்திருப்பூர் நெருப்பெரிச்சல், வெங்கடேஸ்வரா கார்டன் இரண்டாவது வீதிக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
வாரம் ஒருமுறையாவது குடிநீர் வழங்க வேண்டும்.- சுதன், நெருப்பெரிச்சல்.ஸ்டேஷன் வேண்டும்புறநகர மக்கள் வீரபாண்டி, நல்லுார் ஸ்டேஷனுக்கு சென்று வர முடிவதில்லை. திருப்பூர் கோவில்வழியில் போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும்.-செல்வராஜ், கோவில்வழி.இப்படியா செல்வது?திருப்பூர் - மங்கலம் இடையே இயக்கப்படும் பஸ்கள், நேர வரையறை சரிவர பின்பற்றுவதில்லை. ஒரு மணி நேரம் பஸ்ேஸ வருவதில்லை. ஓரிரு பஸ்கள் அடுத்தடுத்த ஒரு நேரத்தில் சென்று விடுகிறது-பாண்டியராஜன், பாரப்பாளையம்.
திறந்து கிடக்குது தபால்பெட்டி
திருப்பூர் காந்திநகர் தபால்நிலைய வாசலில் உள்ள தபால்பெட்டி திறந்த நிலையில், பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதிகாரிகள் கவனிப்பதில்லை.- குழந்தைவேல், 15 வேலம்பாளையம். (படம் உண்டு)கழிவுநீர் தேக்கம்திருப்பூர் பெரியார் காலனி, டி.டி.பி., மைதானம் பின்புறம், மெட்டல் டவுன் ரோட்டரி செல்லும் தனியார் பள்ளி முன் மழைநீர், கழிவுநீருடன் தேங்கியுள்ளது. கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நித்தின், பெரியார் காலனி. (படம் உண்டு)ஒரு வாரமாச்சுதிருப்பூர், அனுப்பர்பாளையம், கோவை டிபார்மெண்டல் ஸ்டோர் அருகே குழாய் உடைந்து, 24 மணி நேரமும் குடிநீர் வீணாகிறது. ஒரு வாரமாக தண்ணீர் வீணாகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.- திருக்குமார், அனுப்பர்பாளையம்.
கால்வாய் அடைப்பு
திருப்பூர், என்.ஆர்.கே., புரம் மெயின் ரோடு, தியாகி குமரன் காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேஙகியுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.-கார்த்திகேயன், எம்.ஆர்.கே., புரம். (படம் உண்டு)ரோடு மோசம்திருப்பூர் வெள்ளியங்காட்டில் இருந்து அரசு மருத்துவ கல்லுாரி செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.-குணா, வெள்ளியங்காடு. (படம் உண்டு)குப்பை அள்ளுங்கதிருப்பூர், 28வது வார்டு, காமராஜ் நகர், பாலிஷ் பட்டறை வீதியில், 15 நாட்களாக குப்பை அள்ளாமல் அப்படியே தேங்கியுள்ளது.
காற்றின் வேகத்துக்கு பறக்கிறது.-கல்யாணி, காமராஜ்நகர். (படம் உண்டு)சுத்தம் செய்யணும்அவிநாசி, கைகாட்டிபுதுார், அம்பேத்கர் வீதியில் பொதுக்கழிப்பிடத்தை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யாததால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.- மணி, அம்பேத்கர் வீதி. (படம் உண்டு)ரியாக் ஷன்ரோடு போடுறாங்க !திருப்பூர், அம்மாபாளையம், எம்.ஜி.ஆர்., நகரில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் ரோடு மழைநீர் தேங்கியிருந்தது. தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியான பின், மண் கொட்டி சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.-ஜெய்குமார், எம்.ஜி.ஆர்., நகர். (படம் உண்டு)
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE