பொள்ளாச்சி : பொதுமக்கள் ஒத்துழைப்புடன், பொள்ளாச்சி நகரம் குப்பையில்லாத, சுகாதாரமான நகரமாக மாற்றப்படும் என, திட, திரவக் கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறையில் உறுதி ஏற்கப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி சார்பில், திட, திரவக் கழிவு மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி பட்டறை, கே.கே.ஜி., மண்டபத்தில் நடந்தது. கருத்தரங்கை, மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார்.
நகராட்சி தலைவர் சியாமளா, துணைத்தலைவர் கவுதமன், கமிஷனர் தாணுமூர்த்தி, நகர் நல அலுவலர் ராம்குமார், வியாபாரிகள் சங்கத்தினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.இந்த கருத்தரங்கில், திடக்கழிவுகளை தரம் பிரித்து, மக்க வைத்தும், மறுசுழற்சி செய்து வேறு பொருட்கள் தயாரிப்புக்கு மூலப்பொருளாக மாற்றியும் வருவாய் ஈட்டுவது குறித்து விளக்கப்பட்டது.மேலும், நகராட்சி பகுதியை, குப்பை, கழிவுகளற்ற சுகாதாரம் மிக்க பகுதியாக மாற்ற தேவையான செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த செயல் திட்டத்தில், தனி நபர்கள், நலச்சங்கத்தினர், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் ஒத்துழைப்பும் தேவை என வலியுறுத்தப்பட்டது.குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல், ரோட்டோரம் கொட்டுவது, சாக்கடை கால்வாயில் வீசுவது போன்ற செயல்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அது நம்மையே எப்படி பாதிக்கிறது என்றும் காணொலி காட்சி வாயிலாக விளக்கப்பட்டது.வரும் நாட்களில், அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடணும், பொள்ளாச்சியை குப்பை, கழிவுகளற்ற சுகாதாரமான பகுதியாக மாற்றப்படும் என உறுதி ஏற்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE