'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது'

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (81) | |
Advertisement
ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசுயா.தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கூறியதாவது: ராஜிவ் கொலையை சி.பி.ஐ., விசாரித்து, பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு நடத்தியது. விசாரணையில், பலர் குற்றவாளிகள் என, ஊர்ஜிதம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிலும்
Perarivalan, Rajiv Gandhi assassination case

ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசுயா.

தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கூறியதாவது: ராஜிவ் கொலையை சி.பி.ஐ., விசாரித்து, பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு நடத்தியது. விசாரணையில், பலர் குற்றவாளிகள் என, ஊர்ஜிதம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிலும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டிலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளிகள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அவர்களுக்கு துாக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. பின், கருணை அடிப்படையில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கோர்ட் நடைமுறைகள் அத்தோடு முடிந்து விட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் தற்போது, பேரறிவாளனை விடுவித்துள்ளது. ஒரு கோர்ட், ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை வழங்க முடியும்? ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முடியும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில், ராஜிவ் உள்ளிட்ட 16 பேரை கொன்று தீர்த்த பேரறிவாளனை, கோர்ட் விடுவிக்கும் என்றால், கோர்ட் நடைமுறையை எப்படி எடுத்து கொள்வது என புரியவில்லை. இன்றைக்கு பேரறிவாளனை விட்டவர்கள், அடுத்து அவரோடு சேர்ந்து கொலைகள் செய்த மேலும் ஆறு பேரையும் விடுவிப்பரா?

அப்படியென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் செய்தது தியாகமா? கோர்ட் பார்வையின்படியே எடுத்து கொள்வோம். கோவையில் குண்டு வெடிப்பின் போது கைதான மற்றவர்களையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் இதே தீர்ப்பும், நீதியும் பொருந்துமா?

எங்களை பொறுத்தவரை, ராஜிவ் கொலையாளிகளுக்கு, ஒரு நாளும் மன்னிப்பு கிடையாது. கோர்ட் விடுதலை செய்யலாம். ஆனால், ராஜிவ் கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களும், ராஜிவ் ஆன்மாவும் ஒவ்வொரு நிமிடமும் விடும் சாபத்திலிருந்து, கொலையாளிகள் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinu - frankfurt,ஜெர்மனி
21-மே-202210:40:28 IST Report Abuse
vinu ....
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
20-மே-202218:43:24 IST Report Abuse
spr இந்த வழக்கு ராஜீவ என்ற தன மனிதரைக் கொன்றது மட்டுமல்ல செய்தியில் குறிப்பிடப்பட்ட அப்பாவி மக்கள் அனைத்துத் தமிழர்களையும் கொன்றதற்காக குற்றம் புரிபவர்களைவிட அதற்கு உதவியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும் ஆனால் வாக்கு வாங்கி (வாக்கு வங்கி என்பதனைவிட இந்தச் சொல்தான் பொருத்தம் ஏனெனில் வாக்குகள் வாங்கப்படடவைதானே) அரசியல் காரணமாக இவையெல்லாம் நடத்தப்படுகிறது இதில் பேரறிவாளனைத் தமிழனாகச் சொல்லித் தாங்கள் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று தமிழக மக்களை மூளைச்சலவை செய்யும் முயற்சி. தனிப்பட்ட மனிதரான பேரறிவாளன் குற்றவாளியா இல்லையா என்பதெல்லாம் எண்ணிப்பார்ப்பது ஆதாயம் தராது உயிரிழந்த பிறர் தமிழரா என்று பார்ப்பதால் செத்த அவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் பேசப்போவதில்லை இதில் நம் மண்ணிலேயே நம் பிரதமரை நம் மக்களை வைத்தே கொலை செய்தது நமக்கு எத்தனை அவமானம் என்றெல்லாம் நினைத்தால் தமிழர் தலைவர் என்ற பட்டம் கிடைக்காமற் போகுமோ என்ற அச்சம் அடுத்து அவரை கௌரவிக்கும் வகையில் கலைமாமணி பட்டமும் தரப்படலாம் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா முதல்வரின் அரசியல் சாணக்கியம் என்று கூடப் பேசப்படலாம்
Rate this:
Cancel
19-மே-202215:58:14 IST Report Abuse
ஆரூர் ரங் அனுசுயா அடைந்த அதே கஷ்டத்தை ஏழு பேருக்கும் கொஞ்ச கொஞ்சமாக கொடுத்திருக்க வேண்டும். ஒவ்வொரு விரலாக அறுத்தடுத்திருக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு பாகமாக பிரித்து வெட்டியிருந்தால் நல்லது 👹👹 தூக்கு தண்டனை கூட இவர்களை திருத்தி இருக்காது
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-மே-202206:55:55 IST Report Abuse
Sanny எனது மனா ner...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X