பெட்ரோல் வாங்க பணம் இல்லை ;இலங்கை அரசு பார்லி.,யில் அறிவிப்பு

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
கொழும்பு,-பெட்ரோலிய நிறுவனத்துக்கு கொடுக்க அமெரிக்க டாலர்கள் கையிருப்பு இல்லாததால், பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருப்பதை மக்கள் தவிர்க்குமாறு, இலங்கை அரசு கேட்டுக் கொண்டது. நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு,-பெட்ரோலிய நிறுவனத்துக்கு கொடுக்க அமெரிக்க டாலர்கள் கையிருப்பு இல்லாததால், பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருப்பதை மக்கள் தவிர்க்குமாறு, இலங்கை அரசு கேட்டுக் கொண்டது.latest tamil newsநம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டு பார்லிமென்ட் நேற்று முன் தினம் முதல்முறையாக கூடியது. ரூ.408 கோடி பாக்கிஇந்நிலையில், இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா பார்லிமென்டில் நேற்று கூறியதாவது:கடந்த ஜனவரியில், நம் நாட்டுக்கு பெட்ரோலியப் பொருட்களை அளித்த நிறுவனத்துக்கு 408 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.அதே நிறுவனத்தின் பெட்ரோலை ஏற்றி வந்த கப்பல், நம் கடல் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக நிற்கிறது. 'பழைய தொகையுடன், தற்போது ஏற்றி வந்துள்ள பெட்ரோலுக்கும் சேர்த்து பணம் கொடுத்தால் மட்டுமே, அதை இறக்கி செல்வோம்' என, கப்பல் நிறுவனம் தெரிவித்தது.பழைய தொகையை அளிக்க இலங்கை மத்திய வங்கி உறுதி அளித்து உள்ளது.இதை ஏற்று, தற்போது வந்துள்ள பெட்ரோலை வழங்க கப்பல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இன்னும் இரு தினங்களில் பெட்ரோல் கிடைத்து விடும்.கையிருப்புதற்போது பெட்ரோல் வாங்க தேவையான அமெரிக்க டாலர்கள் கையிருப்பு இல்லை.எனவே, பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும். தேவையான அளவு டீசல் கையிருப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


இதற்கிடையே, ''இலங்கை அரசுக்கு 1,232 கோடி ரூபாய் கடன் உதவியை உலக வங்கி அளித்துள்ளது. உலக வங்கியிடம் இருந்து பெறும் தொகையை எரிபொருள் வாங்க பயன்படுத்த முடியாது.''இதில் ஒரு பகுதியை எரிபொருள் வாங்க பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,'' என, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லி.,யில் நேற்று தெரிவித்தார்.

பார்லி., கூட்டத்தில்

மகிந்த பங்கேற்புஇலங்கையில் கடந்த 9ம் தேதி நடந்த கலவரத்துக்கு பின், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே, திரிகோணமலையில் உள்ள கப்பல்படை தளத்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.அதன் பின் வெளியே தலைகாட்டாத அவர், நேற்று நடந்த பார்லி., கூட்டத்தில் முதல்முறையாக பங்கேற்றார். அவருடன், முன்னாள் அமைச்சரும், மகனுமான நமல் ராஜபக்சேவும் பார்லி., வந்திருந்தார்.Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
19-மே-202220:44:14 IST Report Abuse
Tamilan இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக்குவதுதான் இப்போதைக்கு உள்ள ஒரே வழியாகும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
19-மே-202212:59:32 IST Report Abuse
Ramesh Sargam பணம் இல்லையா? ராஜபக்ஷே குடும்பத்தினர் கொள்ளையடித்து உள்நாட்டு, வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து, பதுக்கி வைத்திருக்கும் பணம், சொத்துக்களை மீட்டு எடுக்கவும். அதுவே போதும் இப்பொழுதுள்ள இலங்கை பிரச்சினையை ஓரளவுக்கு சீர் செய்ய. அதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
Rate this:
Mohan - COIMBATORE,இந்தியா
20-மே-202209:42:12 IST Report Abuse
Mohanஅப்டி ஒரு முடிவை வேற யாராவது வந்து எடுத்திருவங்களோனு தான் இந்த ரணில் விக்ரமனை நியமித்திருக்கிறாங்க ..ராஜபக்ஷே குடும்பம் படே கில்லாடிக நம்ம விடியல் மாதிரி.....
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
19-மே-202207:57:01 IST Report Abuse
Rpalnivelu மகிந்த ராஜபக்சே குடும்பமும் நம்ம திருட்டு வாரிசு கட்சிக் கம்பனி குடும்பம் போல இருக்குதே
Rate this:
சிவானந்தம் - Chennai,இந்தியா
19-மே-202213:48:41 IST Report Abuse
சிவானந்தம்ஒன்றிய கும்பல் எலெக்டோரல் பாண்டில் பல லட்சம் கோடி குவித்து வைத்துள்ளான். நாடு மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டுள்ளதை அறிவிலிகள் தெரிந்துகொண்டாலும் கைக்கூலிகள் இங்கே கூவுவது கேவலம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X