குடகு,-கர்நாடகாவில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த மறுநாளே, இச்சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில், கட்டாய மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர, கர்நாடக அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, அரசு புதிய சட்ட வரைவை தயாரித்து, கவர்னர் தாவர் சந்த் கெலாடுக்கு அனுப்பி வைத்தது. கவர்னர் நேற்று முன்தினம் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்தார்.
இதையடுத்து, சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.இந்நிலையில், குடகு மாவட்டம், மன்சல்லியில் மதமாற்றம் நடப்பதாக, பஜ்ரங்தள் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில், அங்கு ஒரு குடும்பத்தினரை மதமாற்றம் செய்ய முயற்சித்த, கேரளாவை சேர்ந்த குரியச்சன், 55, அவரது மனைவி சலினாமா, 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த மறுநாளே, மதமாற்றத்தில் ஈடுபட்டதாக, கேரள தம்பதி கைது செய்யப்பட்டு முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.போஸ்டர் செய்தி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE