நீர்நிலைகளில் வண்டல் மண் அள்ள அனுமதி! விதிமுறைகள்; குளங்கள் அறிவிப்பு

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
உடுமலை : விவசாய நிலங்கள் வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரும் வகையிலும், உடுமலை தாலுகாவில், 9 குளம், குட்டைகளில், 30 ஆயிரத்து, 742 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக


உடுமலை : விவசாய நிலங்கள் வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரும் வகையிலும், உடுமலை தாலுகாவில், 9 குளம், குட்டைகளில், 30 ஆயிரத்து, 742 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.விவசாய நிலங்களை வளமாக்கும் வகையிலும், நீர் நிலைகளை துார்வாரி கூடுதல் மழை நீர் சேமிக்கும் வகையிலும், திருப்பூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, நீர் நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண், மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.latest tamil news


மண் எடுக்கும் விவசாயிகளுக்கு வேளாண் நிலம், துார்வாரப்படும் குளம் அமைந்துள்ள அதே வருவாய் கிராமம் அல்லது அருகிலுள்ள கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்க வேண்டும்.விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நஞ்சை நிலமாக இருந்தால், இரு ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ஏக்கருக்கு, 75 கன மீட்டர் அல்லது 75 டிராக்டர் லோடு வழங்கப்படும்.புஞ்சை நிலமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு, 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடு வழங்கப்படும். நீர் நிலையின், கரையின் அடிப்பகுதியிலிருந்து, இரு மடங்கு தொலைவில், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் எடுக்கக்கூடாது.

நீர் நிலைகளின் கரை, நீர் வழித்தடங்கள், மரங்கள், கலிங்குகள், மதகு உள்ளிட்ட எந்த கட்டுமானங்களை சேதப்படுத்தக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.உடுமலை தாலுகாவில், விருகல்பட்டியிலுள்ள, பழையூர் குட்டையில், 53.4 ஹெக்டர் பரப்பளவில், 1,620 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.அதே போல், வாகத்தொழுவு, ஜக்கமநாயக்கன்பாளையம் குட்டையில், 18.49 ஹெக்டர் பரப்பளவில், 1,527 கன மீட்டர், பொன்னேரி குட்டையில், 7.31 ஹெக்டர் பரப்பளவில், 604 கன மீட்டர், இலுப்பநகரம், ஆலாமரத்துார் குட்டை, 5.95 ஹெக்டர் பரப்பளவில், 491 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


வடுகபாளையம், சுங்காரமுடக்கு குட்டை, 5.21 ஹெக்டர் பரப்பளவில், 430 கன மீட்டர், அந்தியூர் குட்டையில், 9.71 ஹெக்டர் பரப்பளவில், 802 கன மீட்டர், கணபதிபாளையம் கிராமத்தில், கரையான் குட்டையில், 8.25 ஹெக்டர் பரப்பளவில், 681 கன மீட்டரும், கருப்பராயன் கோவில் குளத்தில், 6.91 ஹெக்டர் பரப்பளவில், 571 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.மேலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சின்ன வாளவாடி, பெரிய குளத்தில், 472.320 ஹெக்டர் பரப்பளவில், 25 ஆயிரத்து, 620 கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.+விண்ணப்பிப்பது எப்படி?

மண் எடுத்து, விளை நிலங்களுக்கு பயன்படுத்த விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க படிவம் வழங்கப்படுகிறது. அதில், பயனாளி பெயர், முகவரி, ஆதார் எண், வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் நீர் நிலை விபரம், கனமீட்டர் அளவு, வாகனத்தின் பதிவு எண் , பயன்படுத்தும் நிலத்தின் புல எண், வருவாய் கிராமம், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்து, ஆவணங்கள் இணைக்க வேண்டும்.அதோடு, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளால் வரையறை செய்யப்பட்ட இடத்தில், ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே மண் எடுப்பேன், நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த மாட்டேன், விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே; வியாபார நோக்கில் விற்பனை செய்ய மாட்டேன் உள்ளிட்ட உறுதிமொழி வழங்குவதோடு, மீறினால், சட்டபடி நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என ஒப்புதல் அளிக்க வேண்டும். அதே போல், கிராம நிர்வாக அலுவலர், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து, நன்செய், புன்செய், மானாவாரி நிலம், பரப்பளவு, இரு ஆண்டாக மேற்கண்ட நிலத்திற்கு, வண்டல் மண் எடுக்கவில்லை, அனுமதி வழங்கலாம் என சான்று வழங்க வேண்டும். அதற்கான மாதிரி படிவம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-202206:24:58 IST Report Abuse
ராஜா இத்தோடு எங்கள் வேலை முடிந்து விட்டது. விதிமுறைகளை குத்தகைக்கு எடுப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
19-மே-202209:42:27 IST Report Abuse
a natanasabapathy அப்பாடா உடன்பிறப்புகள் சம்பாதிக்க வழி பிறந்து விட்டது. அவர்களை தவிர வேறு யாரையும் ஏலம் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் உண்மையான நேர்மையான விவசாயிகளுக்கு மட்டுமே ஏலம் ஒதுக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
19-மே-202208:36:17 IST Report Abuse
duruvasar இதெல்லாம் அந்த முனைவர் பட்டம் பெற்ற அமைச்சருக்கு அத்துப்படி. தகப்பனும் பிள்ளையும் ஒருங்கிணைந்து அழகாக சோலிய முடிச்சிடுவாங்க.. அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண் அளவு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X