'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது!'

Added : மே 19, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசுயா. தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கூறியதாவது:ராஜிவ் கொலையை சி.பி.ஐ., விசாரித்து, பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு நடத்தியது. விசாரணையில், பலர் குற்றவாளிகள் என, ஊர்ஜிதம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிலும்
'கோர்ட் விடுவிக்கலாம்; சாபத்தில் தப்ப முடியாது!'

ராஜிவ் கொல்லப்பட்ட நேரத்தில், ஸ்ரீபெரும்புதுாரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, குண்டு வெடிப்பில் சிக்கி உயிர் பிழைத்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுசுயா.

தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கூறியதாவது:ராஜிவ் கொலையை சி.பி.ஐ., விசாரித்து, பூந்தமல்லி கோர்ட்டில் வழக்கு நடத்தியது. விசாரணையில், பலர் குற்றவாளிகள் என, ஊர்ஜிதம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிலும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டிலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் குற்றவாளிகள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அவர்களுக்கு துாக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. பின், கருணை அடிப்படையில், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கோர்ட் நடைமுறைகள் அத்தோடு முடிந்து விட்டன. ஆனால், உச்ச நீதிமன்றம் தற்போது, பேரறிவாளனை விடுவித்துள்ளது. ஒரு கோர்ட், ஒரு வழக்கில் எத்தனை விதமான தீர்ப்புகளை வழங்க முடியும்? ஆயுள் தண்டனை என்றால், ஆயுள் முடியும் வரை சிறையில் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில், ராஜிவ் உள்ளிட்ட 16 பேரை கொன்று தீர்த்த பேரறிவாளனை, கோர்ட் விடுவிக்கும் என்றால், கோர்ட் நடைமுறையை எப்படி எடுத்து கொள்வது என புரியவில்லை. இன்றைக்கு பேரறிவாளனை விட்டவர்கள், அடுத்து அவரோடு சேர்ந்து கொலைகள் செய்த மேலும் ஆறு பேரையும் விடுவிப்பரா?அப்படியென்றால், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் செய்தது தியாகமா? கோர்ட் பார்வையின்படியே எடுத்து கொள்வோம். கோவையில் குண்டு வெடிப்பின் போது கைதான மற்றவர்களையும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் இதே தீர்ப்பும், நீதியும் பொருந்துமா?எங்களை பொறுத்தவரை, ராஜிவ் கொலையாளிகளுக்கு, ஒரு நாளும் மன்னிப்பு கிடையாது. கோர்ட் விடுதலை செய்யலாம்.

ஆனால், ராஜிவ் கொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களும், ராஜிவ் ஆன்மாவும் ஒவ்வொரு நிமிடமும் விடும் சாபத்திலிருந்து, கொலையாளிகள் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


குண்டு வெடிப்பில் பலியானவர்கள்

lராஜிவ் - முன்னாள் பிரதமர்lதர்மன் - காவலர்lசந்தானி பேகம் - மகளிர் காங்., தலைவர்lராஜகுரு - காவல் ஆய்வாளர்lசந்திரா - மகளிர் காவலர்lஎட்வர்டு ஜோசப் - காவல் ஆய்வாளர்lகே.எஸ்.முகமது இக்பால் - காவல் துறை கண்காணிப்பாளர்lலதா கண்ணன் - மகளிர் காங்., உறுப்பினர்lடேனியல் பீட்டர் - பார்வையாளர்lகோகிலவாணி - லதா கண்ணனின் 10 வயது மகள்lலீக் முனுசாமி - காங்., பிரமுகர்lசரோஜாதேவி - கல்லுாரி மாணவிlபிரதீப் கே குப்தா - ராஜிவ் பாதுகாப்பாளர்lஎத்திராஜு - பார்வையாளர்lமுருகன் - காவலர்lரவிச்சந்திரன் - கமாண்டோ வீரர்- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
23-மே-202209:56:44 IST Report Abuse
muthu விசாரனை அதிகாரி தியாகராஜன் IS A GREAT HONEST MAN REVEALED THE FACTS , MOREOVER AT THE AGE OF 19 ,STILL HE IS A MINOR AND HIS BRAIN IS NOT YET GOT MATURITY EVEN THOUGH LAW SAYS பிரைன் MATUIRTY AT THE AGE OF 18 -21 BUT NO ONE GET IT
Rate this:
Cancel
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
21-மே-202207:23:33 IST Report Abuse
Nithila Vazhuthi ,,,,,
Rate this:
Cancel
Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
21-மே-202207:22:22 IST Report Abuse
Nithila Vazhuthi இன்றய பல முட்டாள்களுக்கு 31 வருடங்களுக்கு முன் ராஜீவ் கொலை வழக்கில் என்ன நடந்தது என்று தெரியாது பேரறிவாளனை பொறுத்தவரை அவன் பேட்டரி எதற்க்காக வாங்கிக் கொடுத்ததான் என்பது அவனுக்கு தெரியாது என்ற அவனுடைய வாக்குமூலம் கோர்ட்டில் சமர்பிக்கப்படவில்லை, என்ற தகவலை விசாரனை அதிகாரி தியாகராஜன் பின்னர் வெளியிட்டு விட்டார் மேலும் அந்த பேட்டரி குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்படவில்லை ராஜீவ் கொலைக்கும் பேரறிவாளனுக்கும் எந்த தொடர்பும் இல்லை கொலையில் சம்பந்தமே இல்லாதவனுக்கு சாபம் வரும் போது ராஜீவ் காந்தியின் முட்டாள்தனமான முடிவால் இலங்கையில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்ட சாபம் ராஜீவ்காந்தியையும் தொடர்புடைய காங்கிரஸ்காரர்களையும் சாராதா?
Rate this:
l.ramachandran - chennai,இந்தியா
23-மே-202212:14:44 IST Report Abuse
l.ramachandranரொம்ப சரி உங்களையும் முட்டாள்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X