புதுடில்லி :மகள் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜிக்கு, ஆறரை ஆண்டுகளுக்குப் பின், நேற்று உச்ச நீதிமன்றம் 'ஜாமின்' வழங்கியது.
தனியார் 'டிவி' உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியும், ஐ.என்.எக்ஸ்., மீடியாவின் உரிமையாளருமான இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் 2015ல் கைது செய்யப்பட்டார்.
இதற்கு உடந்தையாக இருந்த பீட்டர் முகர்ஜியும் சிறையில் அடைக்கப்பட்டார்.
![]()
|
கடந்த 2020ல், பீட்டருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், இந்திராணியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, இந்திராணி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:மகளை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மனுதாரர் கைது செய்யப்பட்டு, ஆறரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இந்த வழக்கில், 237 சாட்சியங்களில், 68 பேரிடம் மட்டுமே விசாரணை நடந்துள்ளது.
இவ்வழக்கு விரைவாக முடிய வாய்ப்பில்லை என்பதால், மனுதாரரை ஜாமினில் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்திராணியின் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போரா, பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த ராகுலுடன் காதல் வசப்பட்டு, திருமணம் செய்ய
முடிவெடுத்தார். இது பிடிக்காமல், பெற்ற மகளையே கொலை செய்ததாக இந்திராணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE