வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை,: மஹாராஷ்டிராவில், ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில், பா.ஜ., குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக சிவசேனா கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
தேர்தல்
இங்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் உட்பட, ராஜ்யசபா உறுப்பினர்கள் ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலையில் முடிகிறது. இதையடுத்து, ஜூன், 10ல் ஆறு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது.மஹா., சட்டசபையில் மொத்தம் 288 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பா.ஜ.,வுக்கு 106 உறுப்பினர்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு, 55; தேசியவாத காங்., 53; காங்., 44 மற்றும் பகுஜன் விகாஸ் அகாதி கட்சிக்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர்.
சமாஜவாதி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., பிரஹார் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா, 2 உறுப்பினர்கள் உள்ளனர். இதர, 8 கட்சிகளுக்கு, தலா ஒரு உறுப்பினரும், சுயேட்சை உறுப்பினர்கள், 13 பேரும் உள்ளனர்.
ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., 2 எம்.பி.,க்களையும், சிவசேனா கூட்டணி கட்சிகளின் உதவியுடன், 2 எம்.பி.,க்களையும், காங்., ஒரு எம்.பி.,யையும் தேர்வு செய்ய முடியும்.
![]()
|
குதிரை பேரம்
இது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியதாவது:ராஜ்யசபாவில் ஆறாவது உறுப்பினருக்காக, பா.ஜ., இப்போதே குதிரை பேரத்தில் ஈடுபடத் துவங்கி விட்டது.
ஊழலில் சேர்த்த பணம் வாயிலாக மாற்றுக் கட்சி உறுப்பினர்களை விலை பேச முயற்சிக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும், சிவசேனா, ஆறாவது வேட்பாளரை களமிறக்கி ஜெயிக்க வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே சத்ரபதி சிவாஜியின் வாரிசான சம்பாஜி ரஜே ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு ஆதரவளிப்பதாக தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE