ஞானவாபி வழக்கு விசாரணை எப்போது ?

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
வாரணாசி வழக்கறிஞர் வேலை நிறுத்தம் காரணமாக ஞானவாபி மசூதி வழக்கில் நேற்று விசாரணை நடைபெறவில்லை.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதன் ஒரு வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார கவுரி சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்து பெண்கள் சிலர் வாரணாசி
ஞானவாபி வழக்கு விசாரணை

வாரணாசி வழக்கறிஞர் வேலை நிறுத்தம் காரணமாக ஞானவாபி மசூதி வழக்கில் நேற்று விசாரணை நடைபெறவில்லை.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதன் ஒரு வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார கவுரி சிலையை வழிபட அனுமதி கோரி, ஹிந்து பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதையடுத்து மசூதி வளாகத்தில் கள ஆய்வு செய்யவும், 'வீடியோ' பதிவு செய்யவும், ஐந்து பேர் அடங்கிய குழுவை நீதிமன்றம் அமைத்தது.


latest tamil newsஇந்தக் குழுவினர், 16ல் தங்கள் ஆய்வை நிறைவு செய்தனர். அப்போது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், வாரணாசி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடக்க இருந்தது.
ஆனால், வழக்கறிஞர்கள் குறித்து மாநில சிறப்பு செயலர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, மாநிலம் முழுதும் நேற்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால், வாரணாசி நீதிமன்றத்தில் நேற்று ஞானவாபி மசூதி வழக்கின் விசாரணை நடக்கவில்லை. இன்று விசாரணை நடக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202217:01:05 IST Report Abuse
அப்புசாமி என்ப அவசரம்?ஒரு 30, 40 வருஷம் போகட்டும். யாராவது வந்து இடிச்சாதான் விஷயம் சூடு புடிக்கும்.
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
19-மே-202211:43:13 IST Report Abuse
Sidhaarth ஆரம்பிச்சிட்டானுங்கப்பா
Rate this:
Cancel
selvaraju - KUALA LUMPUR,மலேஷியா
19-மே-202211:19:09 IST Report Abuse
selvaraju How come sivalingam was inside the Majit, without known to the every day Pray people. and only it happens UP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X