வெளிநாட்டினர் திரைப்படத்திற்கு ரூ.2.5 கோடி ஊக்கத்தொகை

Added : மே 19, 2022 | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் வெளிநாட்டினர் படப்பிடிப்பு நடத்தினால் 2.50 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரான்சில் 'கேன்ஸ்' திரைப்பட விழா நடக்கிறது. இங்கு இந்திய திரைப்பட அரங்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் திறந்து வைத்து பேசியதாவது:வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்கள் இந்திய

புதுடில்லி: இந்தியாவில் வெளிநாட்டினர் படப்பிடிப்பு நடத்தினால் 2.50 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சில் 'கேன்ஸ்' திரைப்பட விழா நடக்கிறது. இங்கு இந்திய திரைப்பட அரங்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் திறந்து வைத்து பேசியதாவது:வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உள்ளுர் திரைப்பட தொழிலாளர்களை பயன்படுத்தி தயாரிக்கும் திரைப்படங்களுக்கு 2.50 கோடி ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். வெளிநாட்டினருடன் இணைந்து திரைப்படம் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களின் முதலீட்டில் 2 கோடி ரூபாய் வரை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் திரைப்படம் எடுக்கும் வெளிநாட்டினர் 15 சதவீத உள்ளுர் மக்களை பணிக்கு அமர்த்திக் கொண்டால் 50 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X