வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நகரி: தனது தொகுதி மக்களிடம் குறை கேட்க வந்த நடிகையும், அமைச்சருமான ரோஜா, முதியவரிடம் கிண்டலாக பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் நகரி தொகுதி எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
முதல்வர் உத்தரவுப்படி வாசலுக்கு வாசல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்' எனும் நிகழ்ச்சியின் கீழ் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் , தங்களின் தொகுதி மக்களை வீடு தோறும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான நடிகை ரோஜா, தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது 60 வயது முதியவர் ஒருவர், நடிகை ரோஜாவிடம் இந்த வயதில் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை' என தனது குறையை கோரிக்கையாக தெரிவித்தார்.

உடனே நடிகை ரோஜா , உங்களுக்குமுதியோர் ஒய்வூதியம் வேண்டுமானால், பெற்றுத்தருகிறேன். அதற்காக உங்களுக்கு திருமணமா செய்து வைக்க முடியும் என கிண்டலாக பதில் அளித்தார். முதியவருடன் ரோஜா உரையாடும் இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE