நேர்மையின் வலி (சிறுகதைகள்)

Added : மே 19, 2022 | |
Advertisement
ஆசிரியர்: 'க்ளிக்' மதுரை முரளி வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்21, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 600 017அலைபேசி: 98429 63972 பக்கம்: 200 விலை: ரூ.140அகில இந்திய வானொலியில் நாடகங்கள், சிறுகதைகள் என முத்திரைப் பதித்து வரும் மதுரை முரளியின் முத்தான பத்து சிறுகதைகளே இந்த நுால். ரயில்வேயில் பணிபுரியும் இவர் கவிஞர், நாடக, சிறுகதை எழுத்தாளர் என்ற பன்முகத்திறமை கொண்டவர். அதன் தாக்கம்
நேர்மையின் வலி (சிறுகதைகள்)


ஆசிரியர்: 'க்ளிக்' மதுரை முரளி வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்21, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை 600 017அலைபேசி: 98429 63972 பக்கம்: 200 விலை: ரூ.140

அகில இந்திய வானொலியில் நாடகங்கள், சிறுகதைகள் என முத்திரைப் பதித்து வரும் மதுரை முரளியின் முத்தான பத்து சிறுகதைகளே இந்த நுால். ரயில்வேயில் பணிபுரியும் இவர் கவிஞர், நாடக, சிறுகதை எழுத்தாளர் என்ற பன்முகத்திறமை கொண்டவர். அதன் தாக்கம் ஒவ்வொரு சிறுகதையிலும் மிளிர்கிறது. பாத்திரப்படைப்பிலும், கதாபாத்திரங்கள் கதையோடு நகர்வதிலும் ஆசிரியரின் தனித்தன்மை தெரிகிறது.
ஒவ்வொரு சிறுகதையிலும் இடம்பெறும் இயல்பான சம்பவங்கள், எங்கோ நாம் இழந்தவற்றை ஞாபகப்படுத்துகின்றன; அல்லது நாம் சந்திக்க ஆசைப்படுபவையாக உள்ளன. இப்படி அன்றாட வாழ்வில், நம் மனஓட்டத்தில் கதைகள் ஒன்றிப்போகின்றன.நல்ல மொழி நடையும், கதைமாந்தர்களின் தேர்ந்த உரையாடல்களும் கதைகள் படிப்பதை கவிதையாய் ரசிக்க துாண்டுகின்றன.- -ஜிவிஆர்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X