பெரிய சரக்குக் கப்பல்களால் கடலுயிர்களுக்கு ஆபத்து கூடி வருகின்றன. குறிப்பாக, அழிவின் விளிம்பில் இருக்கும், 'ரிங்கோடோன் டைபஸ்' எனப்படும் திமிங்கிலச் சுறாக்கள் பல, கப்பல்களால் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றன.
எண்ணெய்த்தொட்டிக் கப்பல்கள், சரக்குப் பெட்டிக் கப்பல்களின் தடங்களை, ஏழு ஆண்டுகளுக்கு விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அதே காலகட்டத்தில், 348 திமிங்கிலச் சுறாக்களையும் கருவிகள் பொருத்தி ஆராய்ந்தனர். இதில் சேகரிக்கப்பட்ட தகவல்களை அலசியபோது, பெரிய கப்பல்கள் செல்லும் வழிகளும், சுறாக்கள் நீந்தும் பகுதியும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது.
காலப்போக்கில், மின்னணு கருவிகள் பொருத்தப்பட்ட சுறாக்கள் கடலின் ஆழத்திற்குச் செல்வது பதிவானது.இதன் பொருள்? அடிபட்ட சுறாக்கள், கடலுக்கடியில் சமாதியாகின்றன. அடிபட்ட சுறாக்கள் கடைசியாக தென்பட்டது, பெரிய கப்பல்கள் அதிகம் போகும் பாதைகளில்தான். எனவே, திமிங்கிலச் சுறாக்கள் நீந்தும் கடல் பாதைகளில், கப்பல் தடம் அமையாதிருப்பதை 'பன்னாட்டுக் கடல் வாணிபக் கழகம்' உறுதி செய்யவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE