திமுக - அதிமுக - மதிமுக ‛‛குடுமிப்பிடி சண்டை'': பேரறிவாளன் விடுதலையில் லாபம் தேடி ‛‛குஸ்தி''!

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (43) | |
Advertisement
சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு தாங்கள் தான் காரணம் என தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் உரிமை கோரி, இந்த விவகாரத்தில் லாபம் தேட துவங்கியுள்ளன.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை(50) உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:முதல்வர் ஸ்டாலின்உச்சநீதிமன்றத்தில்
பேரறிவாளன், குடுமிப்பிடி, திமுக, அதிமுக, மதிமுக, முதல்வர், ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின், பொன்முடி, அமைச்சர் பொன்முடி,  துரைவைகோ, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், பழனிசாமி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு தாங்கள் தான் காரணம் என தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் உரிமை கோரி, இந்த விவகாரத்தில் லாபம் தேட துவங்கியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை(50) உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்துள்ளது. இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை:


முதல்வர் ஸ்டாலின்


latest tamil news


உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விவாதத்தில் தமிழக அரசு தனது அழுத்தமான கருத்தை முன் வைத்து வாதிட்டது. 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் குறித்து, அதனை அளவுக்கு மீறி கவர்னர் தாமதம் செய்தார். உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தி வந்தோம். 2020ம் ஆண்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கவர்னரை சந்தித்து வலியுறுத்தினேன். 7 பேரின் விடுதலைக்கு தொடர்ந்து திமுக குரல் கொடுத்து வந்தது. எதிர்க்கட்சியாக இருந்த போதும், ஆளுங்கட்சியாக ஆன போதும் ஒரே நிலைப்பாட்டை திமுக எடுத்தது. ஆளுங்கட்சியாக ஆன பிறகும், ஜனாதிபதிக்கு கடிதம், கவர்னருக்கு அழுத்தம், மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல், உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதங்கள் என முனைப்புடன் திமுக அரசு இறங்கியது. இறுதி தீர்ப்பு இந்த அடிப்படையில் கிடைக்க இவை மிக முக்கியமான அடித்தளத்தை அமைத்திருந்தது.


அமைச்சர் பொன்முடி:


latest tamil news


பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு என்றோ செய்திருக்க வேண்டிய வேலையை இன்றாவது உச்சநீதிமன்றம் செய்துள்ளது. முதல்வர், எதிர்கட்சியாகவும், ஆளுங்கட்சியாக இருந்தபோதும், கருணாநிதி காலத்திலிருந்து எடுத்த முயற்சிக்கு, ஸ்டாலின் ஆட்சியில் வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி:


latest tamil news


பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஜெயலலிதாவின் சட்ட போராட்டத்தை தளராது முன்னெடுத்து, அதிமுக அரசு மேற்கொண்ட அயராத முயற்சிகளின் நிறைவாக பேரளிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. பேரறிவாளன் மற்றும் 6 பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேரும் விடுதுலை செய்யப்பட வேண்டும் என்பதை ஜெயலலிதாவும், 2018 ம் ஆண்டு முதுல் அதிமுக அரசும் துணிச்சலாக அறிவித்தது. அதிமுக ஆட்சியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு அடித்தளமாகும். இது முழுக்க முழுக்க அதிமுக.,விற்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


மதிமுக.,வின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறியதாவது:


latest tamil news


'காலம் கடந்து கிடைத்த தீர்ப்பாக இருந்தாலும், இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு கிடைத்த தீர்ப்பு போன்றே, மற்ற 6 பேருக்கும் கிடைக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய பங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு உள்ளது. உச்ச நீதிமன்றம் ஒரு சவுக்கடி போல் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு விதை போட்டது நாங்கள். ஆனால் வேறு யாரோ அறுவடை செய்கிறார்கள். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
19-மே-202217:30:03 IST Report Abuse
Priyan Vadanad இதிலென்ன லாபம் கெடக்கு.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
19-மே-202215:24:26 IST Report Abuse
Balaji இந்த பேரறிவாளன் கிருத்துவராக இல்லாமலிருந்திருந்தால் இந்த தமிழ் குரல் ஒலித்திருக்குமா? கேவலமான சிறுபான்மை அரசியல் இது..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-202215:03:46 IST Report Abuse
Kasimani Baskaran நாங்கள்தான் சிறந்த தேச விரோதி என்று சொல்வதில் போட்டி போட்டு கேவலப்படுத்துகிறார்கள். ஆயுதமெடுத்தவர்களோ, சதி செய்தவர்களோ அதே காரணத்துக்காகவே மரணிப்பது ஆண்டவன் வகுத்த நீதி. அதில் தப்பிக்க யாராலும் முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X