வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக.,வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள காங்கிரஸ் தயாரா என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்தது. இதனை திமுக.,வினர் வரவேற்றனர். அதே கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, பேரறிவாளன் விடுதலை கண்டித்து போராட்டம் நடத்துகிறது. இது ஒருபுறம் இருக்க முதல்வர் ஸ்டாலினை நேற்று (மே 18) பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை ஆரத்தழுவி ஸ்டாலின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகையும், பா.ஜ.,வின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, ‛பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் திமுக.,வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? என சவால் விடுக்கிறேன். முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது' எனக் கடுமையாக சாடியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE