ஓட்டை குடையின் விலை ஒரு லட்ச ரூபாயா? கதறும் சீனர்கள்

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஆடம்பர பிராண்ட்களான கூச்சி மற்றும் அடிடாஸ் இணைந்து 1.2 லட்ச ரூபாய் விலையில் சீனாவில் ஒரு குடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த குடை மழையை தடுக்காது ஆனால் வெயிலிலிருந்து மட்டும் காக்குமாம். இந்த ஓட்டை குடையின் படங்கள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது.ஆடம்பர பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா விளங்குகிறது. கடந்த ஆண்டு
Gucci, Adidas, Umbrella, Doesnt Stop Rain, Sparks Backlash, China

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆடம்பர பிராண்ட்களான கூச்சி மற்றும் அடிடாஸ் இணைந்து 1.2 லட்ச ரூபாய் விலையில் சீனாவில் ஒரு குடையை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த குடை மழையை தடுக்காது ஆனால் வெயிலிலிருந்து மட்டும் காக்குமாம். இந்த ஓட்டை குடையின் படங்கள் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேரால் பகிரப்பட்டு கிண்டலடிக்கப்பட்டது.

ஆடம்பர பொருட்களுக்கான முக்கிய சந்தையாக சீனா விளங்குகிறது. கடந்த ஆண்டு சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை 36 சதவீதம் கூடியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனா ஆடம்பரப் பொருட்களின் மிகப்பெரிய சந்தையாக மாறும் என அத்துறை நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்நிலையில் கூச்சி மற்றும் அடிடாஸ் ஆகியவை இணைந்து பல கலெக்ஷன்களை ஜூன் 7ல் சீனாவில் வெளியிடுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒரு குடையை ஆன்லைனில் விளம்பரப்படுத்தினர். அதன் விலையால் அந்த குடை உலகளவில் டிரெண்டானது.


latest tamil news


சுமார் ரூ.1.2 லட்சம் என அந்த குடைக்கு விலை நிர்ணயித்துள்ளனர். மேலும் அந்த குடை வாட்டர்ப்ரூப் கொண்டது அல்ல. அதனால் மழையை தடுக்காது. வெயிலிலிருந்து மட்டும் காக்கும். இல்லையென்றால் அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளனர். இதனை சீன சமூக வலைதளமான வெய்போவில் பதிவு செய்திருந்தனர். அதனை சுமார் 1.4 கோடி பேர் பார்த்துள்ளனர். பலரும் கிண்டல் செய்துள்ளனர், சிலர் விமர்சித்துள்ளனர். ”நடைமுறைக்கு ஒத்துவராதவற்றையும் தங்கள் மதிப்பைக் காட்டுவதற்காக சிலர் வாங்கி பயன்படுத்துகிறார்கள்” என ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-மே-202201:05:26 IST Report Abuse
Fastrack பிரியங்கா சோப்ரா மாதிரி கலியாணம் பண்ணிக்கிறதும் உண்டே
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-மே-202219:29:35 IST Report Abuse
Kasimani Baskaran ஒருவர் வளர்ப்பு நாய்க்கு நான்கு ஆப்பிள் தங்க வாட்ச்களை வாங்கி மாட்டி நடமாடவிட்டார். நான்கு தங்க வாட்ச் அறுபதாயிரம் அமெரிக்க டாலர் (₹46 லட்சம்)
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
19-மே-202218:33:47 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி...குடையை தயாரித்தவர்கள் விஞ்ஞான முறையில் மக்களிடம் பணத்தை எப்படி ஆட்டையை போடுவது என்ற கலையை கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவினரிடம் கற்றிருப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X