நந்தி சிலையை தொட்டு வணங்கிய நாய்: வீடியோ வைரலானதால் கிளம்பிய சர்ச்சை

Updated : மே 19, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
டேராடூன் : கேதார்நாத் கோவிலில் பக்தர் ஒருவர், வளர்ப்பு நாயை அழைத்து சென்று நந்தி சிலையை தொட்டு வணங்க வைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உத்தரகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. குளிர் மற்றும் மழைக் காலங்களில் ஆறு மாதங்களுக்கு இந்த தலங்கள் மூடப்பட்டு இருக்கும்;
Pet Dog, Nandi Statue, Kedarnath Temple, Video Viral, Temple Committee, Promises Action, நந்தி சிலை, நாய், வீடியோ வைரல், சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டேராடூன் : கேதார்நாத் கோவிலில் பக்தர் ஒருவர், வளர்ப்பு நாயை அழைத்து சென்று நந்தி சிலையை தொட்டு வணங்க வைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. குளிர் மற்றும் மழைக் காலங்களில் ஆறு மாதங்களுக்கு இந்த தலங்கள் மூடப்பட்டு இருக்கும்; கோடை காலத்தில் திறக்கப்படும். கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த மே 6ம் தேதி கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டது. கோவில் திறக்கப்பட்டது முதல் தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில், கேதார்நாத் கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர், தனது வளர்ப்பு நாயை அங்குள்ள நந்தி சிலையை தொட்டு வணங்க செய்வதுடன், சாமியார் ஒருவரிடம் ஆசி பெற செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேதார்நாத் கோவில் கமிட்டி தலைவர், 'ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். சாமியார் மற்றும் நிர்வாகிகள் இது போன்ற செயலை தயவு செய்து அனுமதிக்க வேண்டாம்' என கேட்டுகொண்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202210:03:02 IST Report Abuse
Pandiyan Dhyan அனைத்து ஜீவராசிகளுக்கும் கடவுளிடம் வணங்க உரிமை உண்டு தன் பாசமாக வளர்த்த செல்லப் பிராணியை கடவுளிடம் ஆசிபெற்று தவறில்லை இதில் என்ன தவறு இருக்கின்றது
Rate this:
Yesappa - Bangalore,இந்தியா
21-மே-202211:27:39 IST Report Abuse
Yesappaஅப்ப பண்ணி கரி மட்டும் சாப்பிட என்ன பிரச்சனை ???...
Rate this:
Cancel
Dhandapani - Madurai,இந்தியா
20-மே-202207:15:34 IST Report Abuse
Dhandapani திருச்சி திருவானைக்காவில் யானை இறைவனை தினமும் வணங்குவதாக சொல்கிறார்கள்
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
19-மே-202220:34:02 IST Report Abuse
Priyan Vadanad நல்ல செய்தி. எல்லா படைப்புகளும், குறிப்பாக எல்லா உயிரினங்களும் படைத்தோனை தாழ் பணிவது சிறப்பு, எப்போதுமே நல்லது. நமது மதத்தின் மிகப்பெரிய சிறப்பே இதுதான். கடவுளுக்கு ஆனைமுகன், மயில்வாகனன், பைரவர் என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதோடு நின்றுவிடாமல் அந்த உணர்வுகளை செயல்படுத்திடுவோம். கோமாதாவுக்கு கொடுக்கும் மதிப்பு நன்றியுள்ள பைரவர்களுக்கும் கிடைக்கட்டும். இந்த வீடியோவில் உண்மையான பக்திதான் வெளிப்படுகிறது. அந்த பக்தியுள்ள இளைஞர் தன்னோடு இருப்பதெதுவும் இறைவன் கொடுத்த வரம் என்று நினைப்பது தெரிகிறது. அருமையான வீடியோ பதிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X