மாநில உரிமைகளை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு: நிதியமைச்சர்

Added : மே 19, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: ஜிஎஸ்டி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.கடல் சரக்குகள் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு
மாநில உரிமைகளை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு: நிதியமைச்சர்

புதுடில்லி: ஜிஎஸ்டி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

கடல் சரக்குகள் மீதான ஜிஎஸ்டி ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு: இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரை மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால் இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது. ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநில உரிமைகளை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட முடியாது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சமமான உரிமை உள்ளது என தீர்ப்பு உள்ளது. பேரறிவாளன் விடுதலையையும், ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இரு தீர்ப்புகளும் மாநில உரிமைகளை வலுப்படுத்தி உள்ளன.

மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது என்பதை தீர்ப்பு கூறியுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு பரிசீலனைகளை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் அனுப்ப முடியும். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-மே-202208:48:20 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் ஆளுநருக்கு மரியாதை இல்லை, ஜனாதிபதிக்கு மதிப்பு இல்லை, மத்திய அரசுக்கு அய்யய்யோ மன்னிக்கவும் உங்களின் ஒன்றிய அரசுக்கு வேலை இல்லை, இது உங்கள் காலம் நீங்கள் நினைத்தது எல்லாமே நடக்கிறது, பாராட்டுக்கள், நேற்றைய வாட்ஸப்பில் ஒரு அமைசர் மற்றும் அதே கட்சியை சேர்ந்து பேசும் உரையாடலில் அமைச்சர் கூறுகிறார் தற்போதைய ஜட்ஜ் எனக்கு வேண்டியவர் என்று கூறியிருப்பது மக்களின் புருவங்களை உயர்ச்சி பார்க்க வைக்கிறது, இன்றைக்கு வேண்டுமானால் எல்லாமே வெற்றிபோல் தோன்றலாம், உண்மையான வெற்றி என்பது மக்கள் வாழ்வாதாரத்தில் மட்டுமே இருக்கிறது, மக்கள்தான் தீர்மானிப்பார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
20-மே-202203:47:43 IST Report Abuse
John Miller போச்சுடா. நாளை அண்ணாமலை, குஷுப்பு, ராஜா போன்றோர் இவரை பார்த்து ......
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
19-மே-202219:16:36 IST Report Abuse
vadivelu இவர் ரொம்ப படித்தவர என்று நினைத்தேன், ஆங்கிலத்தில் உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை படிக்கலியா.நீதிபதிகள் பேரறிவாளன் குறித்த கேஸுக்கு மட்டும்தான் சொன்னார்கள்.ஐந்து வருடங்களை ஓட்டுங்கள், நீங்க அடுத்த ஐந்து வருடங்களை பற்றி நினைப்பதாகவே தெரிய வில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X