வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் மே 24ம் தேதி டோக்கியோ நகரில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
சீனாவுடன் மோதல் போக்கு உடைய நாடுகளான, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, 'குவாட்' எனப்படும், நாற்கர பாதுகாப்பு பேச்சுக்கான அமைப்பை, 2017ல் புதுப்பித்தன. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம், முதன்முதலாக குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி, ஜப்பான் செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடா மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE