பிரிட்டனின் மைக்கல் பாரடே. 1831ல் டைனமோவை கண்டுபிடிக்க காரணமாக இருந்தவர். பின் இவரது கொள்கைகளை அடிப்படையாக வைத்து பிரான்சின் ஹிப்போலைட் பிக்ஸி, 1832ல் முதல் டைனமோவை வடிவமைத்தார். இயந்திர ஆற்றலின் மூலமாக நேரடியாக மின் ஆற்றலை உருவாக்கும் கருவி டைனமோ. இது சைக்கிள் சக்கரத்துடன் சேர்ந்து சுழலும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த உராய்வினால் உருவாகும் இயந்திர ஆற்றல், மின்னாற்றலாக மாறி, விளக்கின் மின் இழையை அடையும். அது மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றி விளக்கை எரியச் செய்யும்.
தகவல் சுரங்கம்: உலக தேனீக்கள் தினம்
* பூமியில் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், பாசிகளில் 16 ஆயிரம் வகை உயிரினங்கள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி மே மாதம் மூன்றாவது வெள்ளி அழிந்து வரும் உயிரினங்களுக்கான தேசிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
* சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு தேனீக்கள். இதனிடம் இருந்து உழைப்பை கற்றுக்கொள்ள வேண்டும். தேனீக்களை பாதுகாக்க வேண்டி மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தேனீக்கள் இல்லாமல் போனால் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும்.