ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 9,677 பேர் காத்திருப்பு! ஓராண்டு ஆகியும் கிடைக்காததால் பரிதவிப்பு

Added : மே 19, 2022 | |
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 9,677 பேருக்கு இன்னும் கார்டு வழங்கப்படவில்லை. ஓராண்டாகியும் குடும்ப அட்டை கிடைக்காததால், பொருட்கள் வாங்க முடியாமல், பரிதவிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆவடி என,

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு, புது ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 9,677 பேருக்கு இன்னும் கார்டு வழங்கப்படவில்லை. ஓராண்டாகியும் குடும்ப அட்டை கிடைக்காததால், பொருட்கள் வாங்க முடியாமல், பரிதவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆவடி என, ஒன்பது தாலுகா அலுவலகங்கள் உள்ளன.


1,137 ரேஷன் கடை




மாவட்டம் முழுதும், 9 தாலுகாக்களிலும், 6 லட்சத்து 11 ஆயிரத்து 87 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்காக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின்கீழ், 1,137 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்தக் கடைகளில், நான்கு பேர் கொண்ட, குடும்ப அட்டைதாரருக்கு, மாதந்தோறும், 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் உறுப்பினர் இருந்தால், அதிகபட்சமாக, 60 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

மேலும், இலவச கோதுமை வழங்கப்படுவதுடன், சலுகை விலையில், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படுகிறது.கூட்டுக் குடும்பமாக உள்ளோர், வேறு மாவட்டத்தில் இருந்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வருவோர், புதிய ரேஷன் கார்டு கேட்டு, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் செயல்படும், உணவு வழங்கல் துறையிடம், விண்ணப்பம் செய்து வருகின்றனர்.

இம்மாவட்டத்தில், கடந்த ஆண்டில், புதிய ரேஷன் கார்டு கேட்டு, 25 ஆயிரத்து, 244 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.வட்ட உணவு வழங்கல் துறையினர், இம்மனுக்களை சரி பார்த்து, ஆய்வு செய்து, இதுவரை, 15 ஆயிரத்து 567 பேருக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்கி உள்ளனர்.மேலும், 9,677 பேருக்கு, ரேஷன் கார்டு வழங்காமல், நிலுவையில் உள்ளது. இதைத் தவிர, ஒவ்வொரு நாளும், புதிய ரேஷன் கார்டு கேட்டு, பொதுமக்கள், வட்ட வழங்கல் துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே அளித்தோருக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படாத நிலையில், புதிதாக விண்ணப்பித்தோரின் மனுக்களின் நிலைமை, கேள்விக்குறியாக உள்ளன.இதுகுறித்து, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தோர் கூறியதாவது:பொதுவாக, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால், 14 நாட்களுக்குள், அதை பரிசீலனை செய்து, தகுதி வாய்ந்தோருக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், விண்ணப்பம் அளித்தும், மாதக்கணக்கில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாமல், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள், கூடுதல் விலை கொடுத்து, Cகடைகளில், அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.


உரிய நடவடிக்கை


எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், உரிய நடவடிக்கை எடுத்து, விண்ணப்பம் செய்துள்ள தகுதி வாய்ந்தோருக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தேர்தலே காரணம்

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தோருக்கு, துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி, ஆய்வு மேற்கொண்டு, படிப்படியாக ரேஷன் கார்டுகளை வழங்கி வருகின்றனர்.இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் மற்றும் சட்டசபைத் தேர்தல் காரணமாக, புதிய ரேஷன் கார்டு அச்சடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விண்ணப்பித்தோருக்கு விரைவில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.மாவட்ட வழங்கல் துறை அலுவலர்,திருவள்ளூர்.


மூன்று மாதமாக அலைகழிப்பு


எனக்கு திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றுள்ளேன். எனவே, மூன்று மாதங்களுக்கு முன், புதிய ரேஷன் கார்டு கோரி திருத்தணி வட்ட வழங்கல் அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டும் இதுவரை ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று கேட்கும் போது, 'ஸ்மார்ட் கார்டு' இன்னும் பிரின்ட் ஆகவில்லை, கார்டு வந்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அப்போது வாருங்கள் என கூறி அனுப்பினர். மூன்று மாதமாக ரேஷன் கார்டுக்காக காத்திருக்கிறேன்.வா.தாமோதரன், பெரியகடம்பூர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X