என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்? கலைவாணர் அரங்கில் 24, 25, 26ல் 'தினமலர்' வழிகாட்டி

Added : மே 19, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை அளிக்கும்,'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், வரும் 24ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. மாணவர்கள் என்ன படித்தால், சிறந்த எதிர்காலம் உள்ளது என்பது குறித்து, துறை சார்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுதல் அளிக்க உள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வி படிக்க ஆலோசனை அளிக்கும் வழிகாட்டி நிகழ்ச்சி,
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்? கலைவாணர் அரங்கில் 24, 25, 26ல் 'தினமலர்' வழிகாட்டி

சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி ஆலோசனை அளிக்கும்,'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில், வரும் 24ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. மாணவர்கள் என்ன படித்தால், சிறந்த எதிர்காலம் உள்ளது என்பது குறித்து, துறை சார்ந்த வல்லுனர்கள் வழிகாட்டுதல் அளிக்க உள்ளனர்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வி படிக்க ஆலோசனை அளிக்கும் வழிகாட்டி நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், வரும், 24, 25, 26ம் தேதிகளில் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.


என்ன படிக்கலாம்?


பல்வேறு வகை உயர்கல்வி தொடர்பாக, முன்னணி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் கல்வி யாளர்கள், இந்த நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க உள்ளனர். மருத்துவம், இன்ஜினியரிங், தொழில்நுட்பம், அறிவியல், கலை, சட்டம், வேளாண்மை, மனிதவளம், கணினி அறிவியல் சார்ந்த படிப்புகள் குறித்து, விரிவான தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

எந்த படிப்புக்கு என்ன வேலைவாய்ப்பை பெற முடியும்; படிக்கும்போதே வேலைக்கு தயாராகும் முறை, மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து, நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம். ஜே.இ.இ., - நீட், கியூட், கிளாட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகளை அணுகும் முறைகளும், உயர்கல்வியை முழுமையாக முடிக்க வங்கிகளில் கல்வி கடன் பெறுவது குறித்தும், நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.


விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை


நிகழ்ச்சி வளாகத்தில், தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் வெளிநாட்டு கல்வி ஆலோசனை நிறுவனங்கள் என, 80க்கும் மேற்பட்ட நிறுவனங்களின், ஆலோசனை அரங்குகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள், விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான நடைமுறை, கல்வி கட்டணம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை பெறலாம்.

உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற, www.kalvimalar.com/ என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண் வழியாகவும், பெயர் மற்றும் மாவட்ட விபரங்களுடன், மாணவர்கள் பதிவு செய்யலாம்.


விடை சொன்னால் பரிசு


காலை மற்றும் மாலையில், உயர்கல்வி நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியின்போது, மாணவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்போரில், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 'லேப்டாப், டேப்லெட் மற்றும் வாட்ச்' பரிசாக வழங்கப் படும்.


ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பங்கேற்பு


'தினமலர் - வழிகாட்டி' நிகழ்ச்சியில், உயர்கல்வி சார்ந்த முன்னணி நிறுவனங்களின் வல்லுனர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க உள்ளனர். இந்த வரிசையில், நாட்டின் முன்னணி இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

இந்திய நிலவு மனிதர் எனப்படும், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, உயர்கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, நுழைவு தேர்வு வழிகாட்டி நெடுஞ்செழியன், சிறந்த படிப்புகளை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கும் பிரேமானந்த் சேதுராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உயர்ந்த லட்சியத்தை அடைவது குறித்து, தைரோகேர் தொழில்நுட்ப நிறுவனர் டாக்டர் வேலுமணி; தொழில் முனைவோர் ஆவது குறித்து, தொழிலதிபர் குமரவேல்; சி.ஏ., படிப்பு குறித்து ஆடிட்டர் சேகர்; தொழிற்துறை வல்லுனர் செந்தில் ராஜா ஆலோசனை அளிக்க உள்ளனர்.

முக்கிய படிப்புகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா; எதிர்கால ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்; வேலைவாய்ப்பு திறன்கள் குறித்து ஐ.டி., துறை நிபுணர் சுஜித்குமார்; கல்வி கடன் குறித்து, வங்கியாளர் விருத்தாசலம்; அரசு வேலைவாய்ப்பு குறித்து ஆலோசகர் நித்யா ஆகியோரும், மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.


வழிகாட்ட கைகோர்க்கும் நிறுவனங்கள்


'தினமலர்' நாளிதழுடன், கோவை ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து, இந்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முக்கிய 'பவர்டு பை' பங்களிப்பாளராக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை ஷிவ் நாடார் பல்கலை, டாட் ஸ்கூல் ஆப் டிசைன், வேல்ஸ் நிகர்நிலை பல்கலை, பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் நிகர்நிலை பல்கலை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-மே-202209:08:47 IST Report Abuse
Lion Drsekar பூசலார் நாயனார் போன்று எங்கள் தினமலர் வாயிலாக எங்கள் கருத்தை பதிவு செய்கிறோம், எந்த படிப்பு படித்தாலும் போட்டி மிக மிக அதிகம் அதுவும் திறமை இருந்தால் மட்டுமே காலத்தை ஓட்டமுடியும், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது அதற்கு மிக மிக முக்கியம் அறிவுபூர்வமாக சிந்தித்தல், உடனடியாக தீரவும்காணும் ஒரு பயிற்சி பெறுதல், மனதிப் படும் நற்கருத்துக்களை வெளிப்படையாக கூறுதல், அதவிட உயர்பதவியில் இருபப்வர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்கள் சொல்படி நடத்தல் இவைகள் அவசியம், இன்றைக்கு எல்லோருமே பட்டதாரிகள், எல்லோருமே முதல் மார்க்கு வாங்கியிருக்கிறார்கள் ஆனால் தனித்திறமை என்று என்று பார்த்தல் யாருக்கும் எதுவுமே இல்லாதது வருத்தம் அளிக்கிறது, இதற்கு போதிய பயிற்சி இல்லை, அப்படியே இருந்தாலும் சாமானிய மக்கள் சென்று பயிலும் அளவுக்கு அவர்கள் தகுதிக்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது, எனவே வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும் கல்வியியல் கவனம் செலுத்தி இப்படி ஒரு நிகழ்வை உருவாக்கும் தினமலருக்கு பாராட்டுக்கள், நன்றி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X