திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 80 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் தி்ட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் துவக்க விழா, வரும் 23ம் தேதி, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் துவக்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட, 80 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
துவக்க விழாவின் போது, ஆர்.கே.பேட்டை வட்டம், சந்தான வேணுகோபாலபுரம் கிராமத்தில், விவசாயிகளுக்கு தென்னங்கன்று, பயறு வகை விதை, வீட்டு தோட்டம் அமைப்பதற்கான தொகுப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்படும்.விவசாயிகள், தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்து பொறுப்பு அலுவலர்களையும், வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE