கத்தி முனையில் மொபைல் போன் பறிப்பு| Dinamalar

கத்தி முனையில் மொபைல் போன் பறிப்பு

Added : மே 19, 2022 | |
கும்மிடிப்பூண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 28. இவரது நண்பர், விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த திவாகர், 28. இருவரும், கும்மிடிப்பூண்டியில் வசித்தபடி, தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி, தாமரை ஏரிக்கரையோரம் உள்ள அரசு மதுபான கடை அருகே இருவரும் சென்றனர்.அப்போது, மர்ம

கும்மிடிப்பூண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ், 28. இவரது நண்பர், விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த திவாகர், 28. இருவரும், கும்மிடிப்பூண்டியில் வசித்தபடி, தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி, தாமரை ஏரிக்கரையோரம் உள்ள அரசு மதுபான கடை அருகே இருவரும் சென்றனர்.அப்போது, மர்ம நபர் ஒருவர், கத்தி முனையில், இருவரையும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, திவாகரின் வலது கையில் கத்தியால் கீறி விட்டு, புஷ்பராஜிடம், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பறித்து சென்றுள்ளார். கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X