வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : மெட்ரோ ரயில் பணிக்காக, மெரினாவில் காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது.இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால், 'காந்தி சிலை' சேதமடைவதை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, மெரினா காந்தி சிலையை இடமாற்றம் செய்ய, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே, மெட்ரோ ரயில் நிலையம், அதன் கீழ் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளின் போது, சிலை சேதமடைவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலையை மாற்றி வைக்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் முடியும் வரை, வரலாற்று சிறப்பு மிக்க மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தின் நுழை வாயில் பகுதியில், காந்தி சிலை மாற்றி வைக்கப்படும்.மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தப்பின் மீண்டும், மெரினா கடற்கரைக்கு காந்தி சிலை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE