வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஊட்டி: ஊட்டியில் தோடர் பழங்குடியினருடன் இணைந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நடனமாடினார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து சாலை மார்க்கமாக ஊட்டி வந்த முதல்வர் ஸ்டாலினை பர்லியார் பகுதியில் கலெக்டர் அம்ரித் புத்தகம் வழங்கி வரவேற்றார். குன்னூர் மற்றும் ஊட்டியில் தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது வேனில் நின்றவாறு முதல்வர் பேசியதாவது: முதல்வரானதும் முதல் முறையாக நீலகிரிக்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்கள் தரும் வரவேற்பு தனக்கு பணி செய்ய ஊக்கமும் உற்சாகமும் தருகிறது.
நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பி எங்களுக்கு ஆட்சி அமைக்க வழி ஏற்படுத்தினீர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். உங்களுக்கு நன்றி சொல்லவே இங்கு வந்திருக்கிறோம் பத்து வருடங்கள் செய்யவேண்டிய ஆட்சியை ஒரே வருடத்தில் நாங்கள் செய்திருக்கிறோம் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.
நான் போகுமிடமெல்லாம் பொதுமக்களை சந்தித்து ஆட்சி குறித்து கருத்து கேட்கிறேன் அவர்கள் இந்த ஆட்சி திருப்தியாக இருக்கிறது இனிமேலும் நீங்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள் நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் எங்களை அமோகமாக வெற்றிபெற செய்தீர்கள் தொடர்ந்து உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம்" இவ்வாறு அவர் பேசினார்.
பழங்குடி மக்களுடன் நடனம்
ஊட்டி சேரிங்கிராஸ் மற்றும் தோடர்மந்து பகுதியில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தள்மந்து பகுதியில், வரவேற்பு அளித்த தோடர் பழங்குடி மக்களுடன் முதல்வர் பாரம்பரிய நடனமாடினார். பின், 'தமிழகம்' அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அவருடன், நீலகிரி எம்.பி., ராஜா, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE