சென்னை-'சேர்ந்து 12 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரை, இவ்வளவு சீக்கிரம் மாற்றலாம் என்றால், உங்களுடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள்' என, இசையமைப்பாளர் இமானின் 'மாஜி' மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளார்.
இசை அமைப்பாளர் இமான், தன் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தற்போது சினிமா டிசைனர் உபால்டுவின் மகள் அமலியை மறுமணம் செய்துள்ளார்.இதுகுறித்து, இமான் வெளியிட்ட அறிக்கையில், 'அமலியின் மகளான நேத்ரா, இனி என் மூன்றாவது மகள். திருமணத்தில், என் மகள்கள் வெரோனிகா, பிளெஸிக்கா பங்கேற்காதது வருத்தமே. அவர்கள் வருவர் என காத்திருக்கிறேன்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் வெளியிட்டுள்ள பதிவு: இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துகள். 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால், உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவில்லை. ஆனால், புதிதாக ஒரு மகளை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியம். உங்கள் அப்பாவிடம் இருந்து, என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் உங்கள் புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE