சென்னை-சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்றிரவு ஆய்வு செய்தார்.
அப்போது, 760 கோடி ரூபாயில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலக தரத்தில் மறு சீரமைப்பு செய்யும் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். காந்தி இர்வின் சாலை பக்கத்தின் நான்கு மாடி கட்டடம் அமைகிறது. தரைத்தளத்தில் பயணியர் காத்திருப்பு அறை, டிக்கெட் பெறும் மையம்,
இரண்டாம் தளத்தில் அலுவலர்கள் காத்திருப்பு அறை; மூன்றாம் தளத்தில் வணிக வளாகங்கள்; நான்காம் தளத்தில் வர்த்தக அலுவலகங்கள், ஊழியர் ஓய்வு அறைகள், ஹோட்டல் ஆகியவை அமைகின்றன
பூந்தமல்லி சாலை பக்கத்தில் ஆறு மாடி கட்டடம் அமைகிறது. தரைதளத்தில் வணிக அலுவலகங்கள்; இரண்டாம் தளத்தில் வணிக பயன்பாடு பகுதி; மூன்றாவது தளத்தில் 100 கார்கள், 200 டூவீலர்களில் வாகனங்கள் நிறுத்துமிடம்; நான்காம், ஐந்தாம் தளத்தில் தலா 200 கார்கள் வீதம் 400 கார்கள் நிறுத்துமிடம்; ஆறாவது தளத்தில் அலுவலகங்கள் அமைகின்றன
எழும்பூர் ரயில் நிலையத்தின் இருபுறமும் பன்னடுக்கு கட்டடம் ஒன்றும் அமைய உள்ளது. இந்த பணிகள் அனைத்தும், 3.61 லட்சம் சதுர அடியில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து, மத்திய அமைச்சரிடம், ரயில்வே அதிகாரிகள் விவரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE