கைதாகிறார் கார்த்தி சிதம்பரம்? ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் சி.பி.ஐ., முடிவு

Updated : மே 21, 2022 | Added : மே 19, 2022 | கருத்துகள் (39) | |
Advertisement
சென்னை : சீனர்களுக்கு சட்டவிரோதமாக, 'விசா' வாங்கித் தந்த விவகாரத்தில், சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாகிறார். 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாகவும் வலுவான ஆதாரங்கள் சிக்கி இருப்பதால், அவரை கைது செய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது
CBI, Karti Chidambaram, bribes for visas, Congress

சென்னை : சீனர்களுக்கு சட்டவிரோதமாக, 'விசா' வாங்கித் தந்த விவகாரத்தில், சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம் விரைவில் கைதாகிறார். 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாகவும் வலுவான ஆதாரங்கள் சிக்கி இருப்பதால், அவரை கைது செய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி., யுமான கார்த்தி சிதம்பரம், சீன நாட்டினர் 263 பேருக்கு, சட்ட விரோதமாக 'விசா' பெற்றுத் தந்துள்ளார். இதற்காக, அவருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன், 55, என்பவர் இருந்துள்ளார். இதை, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, முதல் குற்றவாளியாக பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மற்றும் அவர்கள் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், இரு தினங்களுக்கு முன், சென்னை, டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், 18 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள சிதம்பரம், கார்த்தி, பாஸ்கர ராமன் வீடு, அலுவலகங்களில், 12 மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

சட்ட விரோதமாக விசா பெறுவது பற்றி, சீன நாட்டினருடன் பாஸ்கர ராமன், தகவல் பரிமாற்றம் நடத்தியதற்கான ஆதாரங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டு, விமானம் வாயிலாக, டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசா மோசடி விவகாரத்தில், கார்த்திக்கு நெருக்கமான தொழில் வர்த்தர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது பற்றி, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் வீடுகளில் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தப்படலாம் என, தெரிகிறது.

'தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட, மின் திட்ட பணிகளுக்காகத் தான் சீன நாட்டினர் வரவழைக்கப்பட்டனர்' என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் பாஸ்கர ராமன் தெரிவித்துள்ளார். ஆனால், சீன நாட்டினர் உளவாளியாக கூட இருக்கலாம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் பற்றிய விபரங்களையும் திரட்டி வருகின்றனர்.

லஞ்சம் மற்றும் விசா மோசடியில், கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டது பற்றி, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்போது, அவர் வெளிநாட்டில் உள்ளார். நாடு திரும்பியதும், கைது செய்யப்படுவார் என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே, ஐ.என்.எக்ஸ்., 'மீடியா' மற்றும் 'ஏர்செல் மேக்சிஸ்' ஊழல் விவகாரம் தொடர்பாக, இரண்டு முறை கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

நான்கு நாள்

சி.பி.ஐ., காவல்!சென்னையில் கைது செய்யப்பட்ட பாஸ்கர ராமன், டில்லியில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நான்கு நாட்கள், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கள் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikrishna - singapore,சிங்கப்பூர்
21-மே-202220:58:09 IST Report Abuse
Ravikrishna இவனை ஒன்னும் செய்ய முடியாது.. ட்ராம போலீஸ் கைது
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
21-மே-202217:26:18 IST Report Abuse
sankar ஆட்சிக்கு வந்து எட்டாண்டுகள் நன்றாகத் தூங்கி விட்டு திடீரென ப.சி. ராஜ்யசபா செல்ல விருக்கும் நேரம் பார்த்து ரெய்டு போனதன் ஆளும் பிஜபியின் இந்த வேஃம், நோக்கம் எல்லாருக்கும் தெரியும். எஃப்.ஐ.ஆரில் தவறுகள் நிறைய உள்ளதாவும் கேள்வி. இதெல்லாம் சட்ட மேதையான ப,சிக்கு தெரியாதா என்ன? கோர்ட்டில் நிற்க வைத்து தலை தொங்கிப் போகும் அளவுக்கு அவர்களை கிழி கிழியென்று கிழித்து சின்னபின்னமக்கி விடுவார் என்பது நிச்சயம்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மே-202211:20:37 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சிறைக்கு சென்றால் தியாகி ஆகலாம் ..தமிழக மக்கள் அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை மக்களவைக்கு அனுப்புவார்கள் இந்த அசிங்கம் இங்குதான் வேற மாநிலத்தில் இல்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X