வெள்ளத்தால் பாலாற்று பாலம் சேதம்; 40 கிராமங்கள் முற்றிலும் துண்டிப்பு

Added : மே 19, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஆம்பூர்-ஆம்பூர் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டதால், 40 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.திருப்பத்துார் மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால், புல்லுார் தடுப்பணை நிரம்பி வழிகிறது.வாணியம்பாடியிலிருந்து மாதனுார் வரை, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாதனுார் - குடியாத்தம்
வெள்ளத்தால்  பாலாற்று பாலம் சேதம்; 40 கிராமங்கள் முற்றிலும் துண்டிப்பு

ஆம்பூர்-ஆம்பூர் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டதால், 40 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்துார் மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்கிறது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால், புல்லுார் தடுப்பணை நிரம்பி வழிகிறது.வாணியம்பாடியிலிருந்து மாதனுார் வரை, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாதனுார் - குடியாத்தம் இடையே பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.தொடர்ந்து, ஆம்பூர், ஒடுக்கத்துாரிலிருந்து குடியாத்தம் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பாக்கம், சிறுவழுதுார் உள்ளிட்ட, 40 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.கடந்தாண்டு நவம்பரில் பெய்த மழைக்கு, இப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்த பிறகு, 5 லட்சம் ரூபாய் செலவில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.தற்போது வந்த வெள்ளத்தில், மீண்டும் அந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தரைப்பாலம் உள்ள பகுதியில், அதிகளவு திருட்டு மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
20-மே-202208:02:16 IST Report Abuse
a natanasabapathy 40 கிராமங்களை இணைக்கும் வழியை தரைப்பாலமாக அமைக்கலாமா .உயர்மட்ட பாலம் அல்லவா அமைக்கப்பட வேண்டும் .மீண்டும் மீண்டும் கொள்ளை அடிப்பதற்காகவே தரைப்பாலம் அமைக்கிரசர்கள்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-மே-202207:34:03 IST Report Abuse
duruvasar எதுவுமே நடக்கவில்லையென்றால் திராவிட மாடல் ஆட்சி நடப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள்.
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
20-மே-202205:27:22 IST Report Abuse
தமிழன் ஒரு பஸ் ஸ்டாப் கட்றதுக்கே இவனுவ பத்து லட்சத்துக்கு கம்மியா பில்லு காட்ட மாட்டானுவ. அஞ்சு லட்சத்துல பாலமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X