கல்குவாரியில் 6வது நபர் உடலை தேடும் பணி தீவிரம்: உதவி இயக்குனர் சஸ்பெண்ட்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திருநெல்வேலி-திருநெல்வேலியில் 4 பேர் பலியான கல் குவாரியின் உரிமையாளர் சொத்துகள் முடக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காத கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குவாரியில் சிக்கியுள்ள 6வது நபர் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான்குளத்தில் தமிழக காங். கட்சியின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருநெல்வேலி-திருநெல்வேலியில் 4 பேர் பலியான கல் குவாரியின் உரிமையாளர் சொத்துகள் முடக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காத கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.latest tamil newsகுவாரியில் சிக்கியுள்ள 6வது நபர் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்தது.திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான்குளத்தில் தமிழக காங். கட்சியின் துணைத்தலைவர் சேம்பர் செல்வராஜ் மகன் குமார் நடத்திவரும் வெங்கடேஸ்வரா கிரஷர் குவாரியில் மே 14 இரவு 11:30 மணிக்கு பாறைச் சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் சிக்கி கொண்டனர். மே 15 ல் மீட்புப்பணியில் முருகன் விஜயன் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர் மீட்பில் செல்வம் முருகன் செல்வகுமார் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன.நேற்று 5வது நாளாக மீட்பு பணி நடந்தது. சரிந்து விழுந்த பாறைக்குள் சிக்கியுள்ள 6 வது நபரான ராஜேந்திரன் உடலை தேடும் பணி நடந்தது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் மீட்பு பணியின் போது கலெக்டர் விஷ்ணு எஸ்.பி. சரவணன் உடன் இருந்தனர்.


'சஸ்பெண்ட்'

கலெக்டர் கூறுகையில் ''ராஜேந்திரன் உடல் பாறைக்குள் இருப்பதால் வெடி வைத்து தகர்த்து பாறையை அப்புறப்படுத்தி விட்டு உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குவாரி குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாத கனிம வளத் துறை உதவி இயக்குனர் வினோத் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகி விட்ட குவாரி உரிமையாளர்கள் சேம்பர் செல்வராஜ் மகனை போலீசார் தேடி வருகின்றனர். கோடிக்கணக்கில் இருப்பு உள்ள அவர்களின் திருநெல்வேலி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.பி.சி. 102 சட்டப்படி அவர்களது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அலுவலகங்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை சேகரித்து வருகிறோம்'' என்றார்.
கண்டுகொள்ளாத துறைகள்

தமிழகத்தில் குவாரி மற்றும் கிரஷர்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு வாரம்தோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் தொழிலாளர் துறையின் பட்டியலில் இவர்களில் பெரும்பாலானவர்கள் பெயர் இல்லை. தற்போதும் இறந்தவர்களுக்கு தலா 5 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்துறை அதிகாரிகள் அனைத்து குவாரிகளிலும் தொழிலாளர் பட்டியல் சரி பார்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இறந்தவர்களில் யாருக்குமே தொழிலாளர் பிராவிடன்ட் பண்ட் இ.எஸ்.ஐ. போன்றவை பிடித்தம் செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அதனை கண்டு கொள்ளவில்லை. விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் யாரும் இங்கு விசாரணைக்கு வரவில்லை.latest tamil newsகுவாரிகள் மூடல்

இச்சம்பவத்திற்குப்பின் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி விருதுநகர் மாவட்டங்களில் குவாரிகளில் விதிமீறல் தொடர்பாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலானவை செயல்படவில்லை.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202214:48:41 IST Report Abuse
ஆரூர் ரங் இப்போ முதல்வர் பழங்குடி இனத்தவர்களுடன் நடனமாடும் வீடியோ வைரலாகின்றதாம் 🤠. நம் நாட்டு நீரோ மன்னன்
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
20-மே-202211:08:42 IST Report Abuse
jayvee என்ன வேலை இது ..மெதுவா.. நாங்க அதுக்குள்ள நெஞ்சுக்கு நீதி ரெண்டு ஷோ பாத்து முடிச்சிட்டோம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-மே-202209:55:29 IST Report Abuse
duruvasar நெஞ்சுக்கு நீதி படத்தின் வெற்றியை காண சகிக்காமல் வெளியிடப்படும் விஷம் செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X