வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாம், 'மண்ணுக்கு உயிர் இல்லை; அது ஒரு ஜடப் பொருள்' என நினைக்கிறோம். ஆனால், ஒரு கைப்பிடி வளமான மண்ணில், 500 கோடி முதல் 700 கோடி வரையிலான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.
![]()
|
நீங்களும், நானும், நம்மை சுற்றியுள்ள பறவைகளும், மரங்களும், விலங்குகளும் இப்போது உயிருடன் இருப்பதற்கு, அந்த நுண்ணுயிரிகள் தான் காரணம். உலகில் உள்ள 87 சதவீதம் உயிரினங்களை, மண் தான் வாழ வைக்கிறது.ஆனால் நாம், மண்ணுக்கு உயிர் இல்லை என்று நினைத்து அதன் வளத்தை இஷ்டத்திற்கு சூறையாடி வருகிறோம். உணவுத் தேவைக்காக, அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகளையும், ரசாயன உரங்களையும் போட்டு மண்ணை கொலை செய்து வருகிறோம்.
பசியால் மக்கள் உயிரிழப்பர்
இந்த கொலைக்கான தண்டனை என்ன தெரியுமா? உலகில் இப்போது இருக்கும் மண் வளத்தை வைத்து, இன்னும் 80 முதல் 100 அறுவடை மட்டுமே நம்மால் செய்ய முடியும். அப்படிஎன்றால், 45 முதல் 60 வருடம் மட்டுமே, நம்மால் விவசாயம் செய்ய முடியும்.வரும், 2045-ம் ஆண்டு, நம் உலக மக்கள் தொகை, 900 கோடியை தாண்டும்; ஆனால், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிடும் என ஐ.நா.,வின் ஆய்வுகள் கூறுகின்றன.
இதன் விளைவாக, அப்போது உலகளவில் பெரியளவில் உணவுப் பற்றாக்குறை உருவாகும். மக்கள் பசியாலும், பட்டினியாலும் கொத்து கொத்தாக இறக்க நேரிடும். மக்கள் உணவுக்காக கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வர்; உள்நாட்டுக் கலவரங்கள் மூளும். இவை எல்லாம் மக்களை பயமுறுத்த சொல்லும் மிகைப்படுத்தப்பட்ட கதைகள் அல்ல. ஐ.நா.,வின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சர்வதேச விஞ்ஞானிகளும் தங்கள் ஆய்வுகளின் வாயிலாக தெளிவாககண்டறிந்த, அதிர்ச்சிகரமானஉண்மைகள். கடந்த நுாற்றாண்டில் சென்னை மாகாணமாக இருந்தபோதும், மேற்கு வங்கத்திலும் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் உயிரிழந்த சம்பவம், மீண்டும் நிகழலாம்.
மண்னை காக்க சட்டமில்லை
இதில் துரதிருஷ்டவசமான நிலை என்னவென்றால், 'மண் அழிவு' என்ற வார்த்தையையே பலரும் இப்போது தான் கேள்விப்படுகின்றனர். சிலர், சிங்கம், புலி மற்றும் பாண்டாக்கள், பனிக்கரடிகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் மட்டும் அழியும் என எண்ணுகின்றனர். அதற்காக அவற்றுக்கென்று வன விலங்கு சரணாலயங்களை உருவாக்கி அதை பாதுகாக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.
அதேபோல், நாட்டில் பசுமை பரப்பை பேணுவதற்கும், காடுகள் அழிவதை தடுப்பதற்கும் தனித் துறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கென்று சிறப்பு சட்டங்களும் உள்ளன. ஆனால், மண் அழிவை தடுப்பதற்கோ, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பாதுகாக்கவோ, உரிய சட்டங்கள் இல்லை. தமிழகத்தில் மட்டுமின்றி உலகளவிலும் இதே நிலை தான்.
பாலைவனமாகும் விவசாய நிலங்கள்
மண்ணை 'மண்' என்று அழைக்க வேண்டுமென்றால் அதில் குறைந்தபட்சம், 3 சதவீதம் கரிமச் சத்துக்கள் இருக்க வேண்டும் என ஐ.நா., கூறுகிறது. ஆனால், தமிழக மண்ணில் கரிமச் சத்தின் அளவு, சராசரியாக 0.68 மட்டுமே உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதன் அளவு 0.5 மட்டுமே உள்ளது. இந்தப் புள்ளி விபரங்கள் என்ன சொல்கிறது என்றால், மண் மணலாக மாறுகிறது.
![]()
|
விவசாய நிலங்கள் எதற்கும் பயன்படாத பாலைவனமாக மாறி வருகின்றன. உலகளவில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னைகளாக பேசப்படும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், தண்ணீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் மூல காரணம், மண் வளம் இழப்பது தான். இந்த ஒரு பிரச்னையை சரி செய்வதன் வாயிலாக, மற்ற எல்லா பிரச்னைகளுக்கும் நம்மால், ஒரே நேரத்தில் தீர்வு காண முடியும்.அது எப்படி சாத்தியம் என்பதை அடுத்து வரும் கட்டுரைகளில் ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம்.- மண் காப்போம்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE