2030ல் 'ஹைப்பர் லுாப்' அதிவேக ரயில் திட்டம்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை,--''வணிக ரீதியாக, 'ஹைப்பர் லுாப்' ரயில் திட்டம், 2030ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அடுத்த தலைமுறை அதிவேக போக்குவரத்து மாற்றத்துக்காக, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள், 'ஹைப்பர் லுாப்' மாதிரி ரயிலை வடிவமைத்து உள்ளனர். இதன்படி, ஒரு மணி நேரத்தில், ௧,௦௦௦ கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை தயாரிக்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை,--''வணிக ரீதியாக, 'ஹைப்பர் லுாப்' ரயில் திட்டம், 2030ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.latest tamil newsஅடுத்த தலைமுறை அதிவேக போக்குவரத்து மாற்றத்துக்காக, சென்னை ஐ.ஐ.டி., மாணவர்கள், 'ஹைப்பர் லுாப்' மாதிரி ரயிலை வடிவமைத்து உள்ளனர். இதன்படி, ஒரு மணி நேரத்தில், ௧,௦௦௦ கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை தயாரிக்க முடியும். இதற்கான மாதிரியை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இப்புதிய ரயில் திட்டத்தை வடிவமைத்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி:அதிவேக ரயில் போக்குவரத்துக்கான, 'ஹைப்பர் லுாப்' திட்டத்துக்கு, மத்திய ரயில்வே அமைச்சகம் முழு ஆதரவு அளிக்கிறது. கூடுதல் நிதிஇத்திட்ட மேம்பாட்டுக்காக, சென்னை ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனம் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, ௮.௩௪ கோடி ரூபாய் நிதியை, ரயில்வே ஒதுக்கியுள்ளது.வணிக ரீதியாக, அதிவேக ரயில் திட்டம், 2030ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவில்லை.

நிதி ஒதுக்கீடு செய்வதில், எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை. காங்., ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை விட, தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்., ஆட்சியில், ௨௦௦௯ முதல் ௨௦௧௪ வரை, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, ஆண்டுக்கு 830 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், பா.ஜ., ஆட்சியில், 2014- முதல் ௨௦22 வரை, ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாயும், நடப்பாண்டு 3,861 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

யானைகள் இறப்பை தவிர்க்க, புதிய முயற்சியை ரயில்வே துறை மேற்கொள்ள உள்ளது. ரயில் வழித்தடங்களில், யானைகள் தடையின்றி கடக்க ஏதுவாக, சுரங்கப்பாதை ஏற்படுத்தப்படும். இதற்காக, மத்திய வனத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.இத்திட்டத்துக்கு அதிகளவில் செலவானாலும், யானை உள்ளிட்ட வன விலங்குகளை காப்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக, எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய, 5 ரயில்வே நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இதில், 760 கோடி ரூபாய் மதிப்பில், உலக தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்படும்.


latest tamil newsதமிழகத்தில், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து, தற்போது தான் மீண்டு வருகிறோம். தற்போதைய சூழலில் முதியோருக்கான கட்டண சலுகைக்கு வாய்ப்பில்லை.புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தும் திட்டம் சாத்தியமானது தான். இவ்வாறு அவர் கூறினார்.தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, ஐ.சி.எப்., பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-மே-202211:46:07 IST Report Abuse
பாமரன் இந்திய ரயில்வேக்குன்னு ஒரு பாரம்பரிய பெருமை உண்டு... அதாவது உலகத்திலேயே பெரிய கழிப்பிடத்துக்கு சொந்தக்காரங்கன்னு... ட்ராக்லேயும் சைடுலேயும் அவ்ளோ பேர் பயனடைஞ்சு பெருமையை காலங்காலமா நிலைநாட்டிகிட்டு இருந்தாங்க... ஸ்வாட்ச் பாரத்துன்னு நம்மகிட்ட கலெக்சன் பண்ணி ஊருக்குள்ளாற ஒருவாரம் மட்டுமே வேலை செய்யுற கக்கூஸ்களை கட்டி மக்களை ரயில் டிராக் பக்கம் வராமல் அங்கேயே கலீஜ் பண்ணுரதை கூட பொருத்துக்கலாம்... ஆனால் ரயில் பெட்டிகளில் பயோ டாய்லட்டுன்னு ஒன்னை கொண்டாந்து நார அடிச்சி வச்சிருக்கறதை என்னன்னு சொல்ல... 😡😡 முதலில் 2030 க்குள் இந்த டாய்லட்டுகளை சரிபண்ணுங்கய்யா... தேவைப்பட்டால் அதுக்கும் உபயோகிப்பாளர் செஸ் போட்டு கொள்ளையடிங்க (செம்ம ஐடியால்ல.. 😁).. மக்களின் சுகாதாரம் கெட்டுப்போகுது... அப்பாலிக்கா ஹைப்பர்லூப் வடை ஆத்மநிர்பர்பர்புர்புர்லேயே சுடலாம்..🤣🤣
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
20-மே-202211:00:49 IST Report Abuse
CBE CTZN அட ரயில்வே நிர்வாகமே, முதலில் கொரோனாவிற்கு முன் இயங்கிய அணைத்து ரயில்களை ஏற்கனவே வரையறுக்கப்பட்ட கட்டணத்துடன் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்... எங்கள் ஊரில் பாத்து ரயில்களுக்கு நிருத்த்தம் இருதது, இப்பொழுது நான்கு தான் நிற்கிறது, அதில் ஒன்று சாதாரண பயணிகள் கட்டணப்பிரிவில் இருந்து உயர்த்தப்பட்ட எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயங்குகிறது...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-மே-202209:53:17 IST Report Abuse
duruvasar தமிழ்நாட்டில் சேலம் சுற்றுசூழல் ஆர்வலர், ஐ நா புகழ் சமூக சிந்தனையாளர், நோட்புக் மணி இவர்கள் அனுமதி இல்லாமல் இங்கே ஒரு ..... வெளியே எடுக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X