சட்ட விதிகளை ஏற்காவிட்டால் வெளியேறலாம்: இணைய சேவை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி,-''இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத, இணைய சேவை நிறுவனங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு, நாட்டை விட்டு வெளியேறுவது தான்,'' என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு, இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில், சமீபத்தில் பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-''இந்தியாவின் சட்ட விதிகளை ஏற்க விரும்பாத, இணைய சேவை நிறுவனங்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு, நாட்டை விட்டு வெளியேறுவது தான்,'' என, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



latest tamil news


மத்திய அரசு, இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில், சமீபத்தில் பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, வி.பி.என்., எனப்படும் 'விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க்' தளங்கள், இணையதளங்களில் அத்துமீறல்கள் நடக்கும்போது, ஆறு மணி நேரத்துக் குள் தகவல் தெரி விக்க வேண்டும். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கான தகவல்களை பாதுகாக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.நாம் இணையதளத்தை பயன்படுத்தும்போது, நமக்கென, ஒரு 'ஐ.பி., அட்ரஸ்' எனப்படும் இணைய அடையாளம் உருவாக்கப்படும்.

இதன் வாயிலாக, எந்தக் கருவியில் இருந்து தகவல் தேடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.அதே நேரத்தில், வி.பி.என்., வாயிலாக பயன்படுத்தும்போது, நம்முடைய தகவல்கள் மறைக்கப்படும். இது தனிநபர் தகவல் பாதுகாப்பு என்று கூறப்படும் நிலையில், யார், எங்கிருந்து எந்த தகவல்களை தேடுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.இதையடுத்து, இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:இந்தியாவில் இணையத்தில் தகவல்களை சேமிக்காதவர்கள், உடனடியாக சேமிக்க வேண்டும். அரசு மற்றும் அரசு அமைப்புகள் கேட்கும் தகவல்களை உடனடியாக தர வேண்டும்.


latest tamil news



இணைய விதிமீறல்கள் குறித்து தகவல்களை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாது என்று கூறுபவர்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அது, இந்தியாவை விட்டு வெளியேறுவது தான். இணைய பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-மே-202210:13:23 IST Report Abuse
NicoleThomson பிரான்ஸ் என்ற கிருஸ்துவ நாடு வெளிப்படையாக ஒரு மதத்தை காட்டி சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளதை இங்கே நினைவு கூற விரும்புகிறீன்
Rate this:
Cancel
20-மே-202206:16:11 IST Report Abuse
அப்புசாமி சீக்கிரமா வெளியேறிடுவாங்க. சீனா மாதிரி வாட்சப், டுவிட்டர், ஃபேஸ்புக் எல்லாத்தையும் தடை செய்யுங்க. ஆத்மநிர்பரா போதும்
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
20-மே-202215:59:13 IST Report Abuse
Davamani Arumuga Gounder.. அதெல்லாம் தடை செய்யவே வேண்டாம்.. கடந்த மன்னு மோகன் ஆட்சியின் பொழுது, ஒரு சித்தாளின் கூலி ரூ. 150/- ஆக இருந்தது.. அப்போ... ப்ரிபெய்டு ..ஒரு மாதத்திற்கு ரூ 349/- வாய்ஸ்கால் சேவையுடன்..... 1 மாதம் பூராவுக்கும் 1 ஜி.பி. இஒரே ஒரு ஜி.பி. மட்டுமே ( சற்றேறக்குறைய 2. 1/3 நாள் கூலி).இணைய இணைப்பு கொடுத்தார்களே . அது போல .. இப்பொழுது .. சித்தாள் கூலி ரூ. 500/- .. இக்காலத்தில் 2.1/3 நாள் சித்தாள் கூலி ரூ... 1,180/ .. இந்த ரூபாய்க்கு .. ஒரு மாதம் பூராவுக்கும் 1 ஜி.பி. (ஒரே ஒரு ஜி.பி) மட்டும் இணைய இணைப்பு கொடுக்கப்பட்டாலே போதும்்.. நம் மக்கள் .. அதிலும் 200 ரூபஆய் நண்பர்கள் .. எதையும் பார்க்க மாட்டார்களே.. ஒரு ஜி.பி. இணையத்துக்கு மட்டும் ரூ. 1180/- செலவளித்தால் .. டாஸ்மாக் க்கு எப்படி செல்வது? சோறு எப்படி தின்பது? .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X