பா.ஜ.,வில் சேர்கிறாரா படேல் சமூகத் தலைவர்?

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
ஆமதாபாத்: ''பா.ஜ., அல்லது ஆம் ஆத்மியில் சேர்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என, குஜராத் காங்கிரசிலிருந்து விலகிய படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், 28, படிதார் எனப்படும் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, 2015ல் போராட்டம்
பாஜ,  படேல், சமூகத் தலைவர், ஹர்திக் படேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆமதாபாத்: ''பா.ஜ., அல்லது ஆம் ஆத்மியில் சேர்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என, குஜராத் காங்கிரசிலிருந்து விலகிய படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.

குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், 28, படிதார் எனப்படும் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, 2015ல் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து தேசிய அளவில் கவனம் பெற்ற ஹர்திக் படேல், 2019ல் காங்கிரசில் இணைந்தார். 2020ல் குஜராத் காங்., செயல் தலைவரானார். இந்நிலையில் காங்கிரசிலிருந்து நேற்று முன்தினம் விலகிய ஹர்திக் படேல் பா.ஜ., அல்லது ஆம் ஆத்மியில் சேரப் போவதாக தகவல் வெளியானது.


latest tamil news


இது பற்றி, ஹர்திக் படேல் நேற்று கூறியதாவது:பா.ஜ., அல்லது ஆம் ஆத்மியில் சேர்வது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. காங்கிரசுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை. மேலும் குஜராத்தியர் மீது காங்கிரஸ் கட்சியினர் வெறுப்புடன் நடந்து கொள்கின்றனர்.

ஹிந்துக்கள் பிரச்னை பற்றி காங்கிரஸ் பேசுவதில்லை. குடியுரிமை திருத்த சட்டம், வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுப்பு, அயோத்தி ராமர் கோவில் உட்பட எந்த பிரச்னை பற்றியும், காங்கிரஸ் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


பா.ஜ.,வில் சுனில் ஜாக்கர்


பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுனில் ஜாக்கர். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின், ஜாக்கரை, காங்கிரஸ் தலைமை ஓரங்கட்டியது. இதையடுத்து, கட்சியிலிருந்து விலகிய ஜாக்கர், டில்லியில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா முன்னிலையில், அக்கட்சியில் நேற்று இணைந்தார். இது பற்றி ஜாக்கர் கூறியதாவது:எங்கள் குடும்பம், மூன்று தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளது. கட்சியை ஒரு குடும்பமாகவே நான் கருதினேன். ஆனால், கட்சி என்னை மதிக்கவில்லை. காங்கிரசிலிருந்து மிகவும் வருத்தத்துடன் தான் விலகினேன். கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தலைமைக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202218:07:26 IST Report Abuse
ram நீயெல்லாம் வயித்து பசிக்கு சாப்பாட்டைத்தவிற சாணியைத்தான் திண்ணுறேன்றது நல்லா தெளிவா தெரியுது.. இதெல்லாம் என்னடா பொழப்பு.. நேற்று வரை அவனே இவனேன்னு திட்டிக்கிட்டு இருந்தே .. இன்னைக்கு ஒன்னா நிக்குறே.. இதுக்கு நீ நநடுரோட்டுலே நின்னு நான்ங்கு பேரோடதை நல்லா ஊ............ லாம்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
20-மே-202214:29:57 IST Report Abuse
Soumya இந்துமத ஜென்ம விரோதி புரூடா விடியல் மாதிரி இருக்காமல் இந்துக்களை காப்பாற்ற பாஜகவில் இணைந்து செயல்படுங்கள்
Rate this:
Cancel
KMP - SIVAKASI,இந்தியா
20-மே-202214:03:17 IST Report Abuse
KMP பணம் பதவிக்கு மாறிக்கொண்டே இருப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X