கொண்டாடும் கட்சிகள்; முகம் சுளிக்கும் மக்கள்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (136) | |
Advertisement
நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, சிறை தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்கு, 'நாங்கள் தான் காரணம்' என, திராவிட கட்சிகள், போட்டிப் பெருமை அடித்துக் கொள்வது, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தாலும், அவரை நிரபராதி எனக் கூறவில்லை. இந்நிலையில் அவரது விடுதலையை திராவிட கட்சிகள் பெரிய அளவில் கொண்டாடி
Perarivalan, Rajiv Gandhi assassination case, ADMK, DMK, BJP, Annamalai

நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி, சிறை தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்கு, 'நாங்கள் தான் காரணம்' என, திராவிட கட்சிகள், போட்டிப் பெருமை அடித்துக் கொள்வது, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தாலும், அவரை நிரபராதி எனக் கூறவில்லை. இந்நிலையில் அவரது விடுதலையை திராவிட கட்சிகள் பெரிய அளவில் கொண்டாடி வருவதுடன், அவர் விடுதலைக்கு தாங்கள் தான் காரணம் என, அடித்துக் கொள்கின்றன.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அளித்த பேட்டியில், ''அ.தி.மு.க., மட்டுமே பேரறிவாளன் விடுதலைக்கு அக்கறையாக செயல்பட்டது. அவரது விடுதலையை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக, தி.மு.க., கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. ''கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நளினிக்கு தண்டனையை குறைத்து, மற்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,'' என தெரிவித்தார்.

இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், 'பேரறிவாளன் விடுதலைக்காக பாடுபட்ட தி.மு.க., அரசின் நடவடிக்கைகளை கேலிக்கூத்து என விமர்சிப்பது வெட்கக்கேடானது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு துளியும் பொருத்தம் இல்லாதது' என கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் கொலை வழக்கில், சிறை தண்டனை பெற்றவர் விடுதலைக்கு, தாங்கள் தான் காரணம் என, இரு கட்சிகளும் பெருமை அடித்துக் கொள்வது, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.


latest tamil newsமுதல்வரின் செயல்பாடு சரியல்ல!

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பா.ஜ., ஏற்கிறது. பா.ஜ.,வை பொறுத்தவரை பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் குற்றவாளிகள் தான். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பேரறிவாளன் நிரபராதி என்று, எந்த இடத்திலும், ஒரு வார்த்தை கூட இல்லை. பேரறிவாளனை தி.மு.க.,வினர் கொண்டாடுகின்றனர். தியாகி போல கொண்டாடப்பட வேண்டியவர் அல்ல. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது சத்திய பிரமாணம் எடுத்து விட்டு, அனைத்து மக்களுக்கும் நேர்மையாக, சட்டத்தை நிலைநாட்டக் கூடிய முதல்வராக இருப்பாரா என்று சந்தேகம் வருகிறது. தி.மு.க., வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை செய்கிறது. வருங்கால தலைமுறையினருக்கு தவறான வாதத்தை முதல்வர் ஸ்டாலின் காட்டக் கூடாது. காங்கிரசும் ஒப்புக்கு சப்பாணியாக, இரட்டை வேடம் போடுகிறது. அரசுக்கு கொடுக்க கூடிய ஆதரவை, காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும். இதை விட சித்தாந்த அடிப்படையில், காங்கிரசுக்கு வரும் சவால் என்னவாக இருக்கும்? இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (136)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202218:04:12 IST Report Abuse
ram திருட்டுக்கூட்ட தலைவன்.... ஒரு மிகப்பெரிய கொலைக்குற்றவாளியை ஆறத்தழுவும் காட்ச்சி.. நீ ... என் இனமடா... நல்லா இருக்கே இது... இவனுங்க இரண்டுபேருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..
Rate this:
Cancel
20-மே-202217:14:44 IST Report Abuse
அருணா இந்த கட்டிப்புடி வைத்தியம் தேர்தலா ஆறுதலா இனி கைதிகள் நம்பிக்கை யுடன்திட்டமிடலாம்தாயினும்பரிந்ததுசால முதல்வர் உள்ளார் கவர்னர் இல்லாமல் அல்ப ஈ கோ satisfaction
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
20-மே-202216:45:24 IST Report Abuse
abibabegum ஒன்பது காவலர்கள் ஒரு சிறுமி ரெண்டு காங்கிரசுக்காரர்கள் ரெண்டு குற்றவாளிகள் ஐந்து பொதுமக்கள் கைகள் வேறு கால்கள் வேறு தலை வேறு ஆகா சுக்குநூறாக சிதைந்து மரணமடைந்த வர்களின் ஆன்மாக்கள் நிச்சயமாக தி.மு.க மற்றும் அண்ணா.தி.மு.கவை பழிவாங்காமல் இருக்காது.. ஒரு தீவிரவாதியை ஒரு குற்றவாளியே கட்டிப்பிடித்து கொண்டாடும் உலகத்தில் ஒரே மனிதன் நம்ம மனநலம் குன்றிய தி.மு.க அரசில் உள்ள ஸ்டாலின் மட்டும் தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X